Thursday, April 30, 2009

பகுத்தறிவின் பதில்

ஆதிக்கசாதியில் பிறந்தவன் தனது சொந்த சாதியின் ஆதிக்கத்தை எல்லாத் தளங்களுலும் எதிர்த்து போரிட்டால்தான் மக இக போன்ற அமைப்புகளில் இருக்க முடியும்... இது ஜெயா போல என நினைக்க வேண்டாம்... களப்பணி பற்றி பேச எந்த பெரியாரியல் சிந்தனைவாதிகளுக்கும் தகுதி இல்லை
நமது பதில்:---
நான் முதலில் கூறியபடி முக்கிய முரண்பாட்டை கவனிக்காமல் அல்லது எதோ பதில் சொல்ல வேண்டும் என்ற வேகத்தில் வரும் விமர்சனங்களாகத்தான் எமக்குப் படுகிறது.பார்ப்பான் என்பவன் சாதி அல்ல.மாறாக அவர்கள் ஒரு இனம்.சொந்த சாதிக்கு எதிரான நடவடிக்கை பெரியார் மற்றும் பெரியார் இயக்கம் செய்யாத புதிய நடவடிக்கை எதாவதை ம.க.இ.க. கண்டுபிடித்துள்ளதா அய்யா? 1925 முதல் பெரியார் இயக்கம் செய்யாத சாதிக்கு எதிரான சுய நடவடிக்கைகளை வரிசைப் படுத்துங்களேன்.
அதற்குப் பின் களப்பணி பற்றி பேசுவோம்.யாருக்கு யோக்கியதை உள்ளது என்று..


April 26, 2009 11:08 PM
rasa said...
இந்து என்று சொல்லாதே பாப்பான் பின்னால் செல்லாதே எனச் சொல்லுவதற்கு தகுதி மக இக காரனுக்குத்தான் உண்டு. நீங்கள் பத்தாண்டுகளுக்கு பிறகு கோயில் நுழைவை போராட்டமாக்கிய போது அந்த கருவறையில் நுழைந்து திருவரங்கநாதனை தீட்டாக்கி இந்து என்பது நம்மை அடியாளாக்கி மசூதியை இடிக்கத்தான் என்று அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள்... அன்று உங்கள் தலைவர்கள் நக்கிக் கொண்டிருந்தது பாப்பாத்தி யின் போயசு தோட்டத்து காலை...
நமது பதில்:----
அடேயப்பா!!1 என்ன கொடுமை அய்யா.ஏனென்றால் எங்களுக்கெல்லாம் வரலாறு தெரியாது ஏதோ ம.க.இ.க.காரன் சொல்லித்தான் எங்களுக்குத்தெரிகிறது.அடக்கொடுமையே போ!
வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போமா?
1922 - ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரஸ் மநாட்டில்கோவில் நுழைவு,பொது உரிமைகள் வேண்டும் என்று தீர்மானம் பெரியாரால் கொண்டுவரப்பட்டது.[ அப்போதே எங்கள் ம.க.இ..க.காரந்தான் இதற்குக் காரணம் என்றும் சொல்லிவிடுங்களேன் ]
1924 - ஆம் ஆண்டு கேரளாவில் திரிவிதாங்கூர் சமஸ்த்தானத்தில் இருந்த வைக்கத்தில் கோவில் தெரு வழியாக தலித்துகள் நடக்ககூடாது என்பதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றவர் பெரியார்.
1925 - ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தின் எதிரொலியாக அப்போது திருவிதாங்கூர் சஸ்தானத்திற்கு உட்ப்பட்ட சுசீந்திரத்தில் தீண்டப்படாதோர் கோவில் நுழைவு கிளர்ச்சி அவ்வாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி நடை பெற்றது.
”சுசீந்திரம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கேயாகும்.
தமிழ்நாட்டினர் ,வைக்கம் சத்தியாகிரகத்திற்கு எவ்வாறு பணம் கொடுத்தும்,ஆட்கல் உதவியும் ஒத்தாசையும் செய்தார்களோ அவ்வாறே சுசீந்திரம் சத்யாகிரகத்திற்கும் தாங்கள் நன்கொடை அளித்தும் ஆட்கள் உதவியும் முழு ஒத்தாசையும் அளிப்பார்களென்று நம்புகிறேன்”
பெரியார் - குடியரசு 31.01.1926.
1927 - ஆம் ஆண்டு ஜே.என்.இராமநாதன் தலைமையில் பல தாழ்த்தப்பட்ட தோழர்கள் திருச்சி தாயுமானவர் கோவிலில் நுழைந்தனர்.அவர்கள் மலைக்குப் படியேறிச் சென்றபொழுது பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரவுடிகளால் அடித்து தள்ளப்பட்டு பாறைகளில் உருட்டிவிடப்பட்டனர்.
ஜே.எஸ்.கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலை கோவிலில் நுழைந்தவர்களை கோவிலுக்குள் வைத்துப்பூட்டி விட்டனர்.அவர்கள்மீது வழக்கும் போடப்பட்டது.
1927 - ஆம் ஆண்டு மே மாதம் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட அனைத்துச் சாதியினரும் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நுழையச்சென்றனர்.இதைக்கேள்விப்பட்ட கோவில் நிர்வாகிகள் கோவில் நுழைவாயில் மற்றும் கருவறையைப் பூட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.இருப்பினும் ப்க்கவாட்டு கதவுகள் மூலமாக தோழர்கள் கோவிலினுள் நுழைந்தனர்.
அடுத்த ஆண்டு 1928 திருச்சி மலைக் கோட்டையிலும் [25.06.1928],திருவானைக்காவிலும்[12.08.1928] கோவில் நுழைவுப் போராட்டம் நடை பெற்றது.இங்கு தோழர்கள் குண்டர்களால் பலமாகத் தாக்கப்பட்டனர்.
1929 - ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடத் தோழர்களையும் அனுமதிக்கவேண்டும்”என்று தெவஸ்தானக் கமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர பெரியார் முன்னிற்கிறார்.அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்றுவிடுகிறார்.
பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு,குத்தூசி குருசாமி,பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரிவீதி ஈஸ்வரன்,ஈரோடு மசைமேடு பசுபதி,ஈரோடு கிருஸ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய மூன்று தழ்த்தப்பட்டத் தோழர்களை நெற்றியில் திருநீரு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக்கொண்டு சென்று தேங்காய், பழம் , பூ ஆகியவை அடங்கிய தட்டுடன் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்தனர்.
இதைக்கண்ட பார்ப்பனர்கள் பொது மக்கள் துணையோடு தோழர்கள் உள்ளிருக்கும் போதே பூட்டிவிட்டனர்.இரண்டு நாட்கல் கதவைத் திறக்க மறுத்து விட்டனர்.அந்த இரண்டு நாளும் நாகம்மையார்தான் அவர்களுக்கு உணவை அனுப்பி வைத்தார்.
பின்னர் பெரியார் வந்தபின் தான் கதவுதிறக்கப்பட்டது.
இது பற்றி குத்தூசியார் கூறும்போது”அந்த இரண்டு நாளும் அன்னை நாகம்மையார் அளித்த உணவு உண்டு பசியாறினோம்.ஆனால் கடவுளான ஈஸ்வரன் தான் பட்டினி கிடக்க நேர்ந்தது”என்றார்.
என்ன கொடுமை இவர்கள் போராட்டம் நடத்திய பின் தான் பெரியாரியக்கம் நடத்தியதாமே!.



April 26, 2009 11:14 PM
rasa said...
இட ஓதுக்கீடு என்பது பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்று கிடையாது.. இப்படி எளிமையாகப் புரிந்து கொள்வோமே...

பாப்பான் மற்ற சாதிகளை ஒடுக்கினான்... எப்படி ஒரு வில்லன் கதாநாயகியை கற்பழிப்பதைப் போல•..அப்படி என வைத்துக் கொண்டால் அதற்கு தரப்படும் நட்ட ஈடுதான் அல்லது மறுவாழ்வுதான் இட ஒதுக்கீடு.. அந்த மறுவாழ்வே அதாவது ஒரு வில்லனுக்கு முன்னால் தானும் ஒரு மனுஷியாக வாழ்ந்து காட்டுவதே அவனுக்கு எதிரான நடவடிக்கை என அப்பேதை நம்பினால் யாருக்கு அறிவு இல்லை..

நான் என்ன சொல்றேன்.. மறுவாழ்வ பாத்துக்கிடலாம்... அதுக்கும் வில்லன கொல்லுறதுக்கும் சம்பந்தம் இல்லங்குறன்... நீங்க என்ன சொல்றீங்க•.. மறுவாழ்வு பத்தி பேசினாத்தான் அல்லது ஆதரித்தால்தான் பெண்கள் விடுதலை ஆவாங்க நீங்களும் நம்ம ஆளு ஆவீங்கங்குறீங்க•..

என்ன பண்றது பகுத்தறிவ
நமது பதில்:------
என்னையா உதாரணம்? சரி அந்தப் பேச்சுக்கே வருவோம்.இட ஒதுக்கீடு என்பது மறுக்கப்பட்ட கல்வி,வேலை,சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பெறுவது.ஆனால் தங்களது உதாரணம் வில்லன் கற்பழிப்பு.இது எப்படி பொருந்தும்?அதாவது உதாரணமாக கல்வி மறுக்கப்பட்டது எனவே அதை திரும்பப் பெறுதல் என்பது அதே உரிமையை மறுபடிப் பெறுதலென்பது சாத்தியம்.ஆனல் தங்களது உதாரணம் கற்பு என்பது போனால் போனதுதான் [ தக்களது உதாரணம் கற்பைச் சொல்லி இருப்பதால்தான் இவ்வுதாரணம் மற்றபடி கற்பு என்பது கற்பனையே ] அது எப்படிப் பெறமுடியும்? அது என்ன உரிமைப் பிரச்சனையா?இல்லையே!அது வன் தாக்குதல் அதை எப்படி உரிமைச் சிக்கலுக்கு உதாரணமாக்கௌவீர்?பார்ப்பான் சிதைத்தது என்பது ஒடுக்குவதற்காக சமூகத்தைப் பிரித்து உரிமைகளைப் பரித்தான்.மாறாக இச்சமூகத்தின்கற்பை அதாவது மீண்டும் பெற முடியாத ஒன்றை அழிக்கவில்லை.
இது ஒன்றும் அகதி முகாம் இல்லைத் தோழரே!மறுவாழ்வு பெற.உரிமைகள் ம்றுக்கப்பட்ட சமூகம்.இடஒதுக்கீடு அவ்வாறு இழந்த உரிமையைப் பெற்றுத்தரும் முறையாகும்.அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன அய்யா?பின்னர் படிப்படியாக அமெரிக்க நிறுவனங்களில் கருப்பினத்திற்கு இத்தனை சதம் வேலை வாய்ப்பு மற்றும் விற்பனையாரில் கூட குறிப்பிட்ட சதம் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதே .இதைச் சொல்லக்காரணம் இழந்த உரிமையைப் பெறுவது என்பது மறுபடி பெறவே முடியாத கற்பு அல்ல.நிவாரனமும் அல்ல.
பெண் விடுதலையும் அப்படித்தான் அய்யா. பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி வேலையைக் கொடுப்பது என்பது உரிமைச் சிக்கலா?அல்லது நிவாரணமா?பெண்கள் தாங்கள் இழந்த உரிமை ப்ற்றிய சிந்தனை எப்படி வந்தது?கல்வி மற்றும் சமூக விழிப்புணர்ச்சி வந்ததாலேதானே!அதற்குத் தானே இடஒதுக்கீடு.
என்னதான் பண்றது புர்ர்ர்ரட்ச்ச்ச்சி!!!!

April 26, 2009 11:22 PM
rasa said...
அதிமுக ஒரு திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த்து என்ற உங்களது புரிதலை நினைத்தால் கண்ணைக் கட்டுகிறது...திமுக அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் அளவிலே கூட பலருக்கு நாம் பெரியார் வழித்தோன்றல் என்ற உணர்வு கூட கிடையாது...பெரியாரை அவர்கள் படித்திருக்கிறார்களா என்பதை அண்ணன் அழகிரி, ஸ்டாலின் போன்றோரிடம் கேட்டாலே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்...

அதிமுகவில் எவனுக்காவது சாதி ஒழிப்பு பற்றிய பெரியாரது கருத்தும், பார்ப்பனியம் என்ற சொல்லுக்கு அர்த்தமும் தெரிந்தால் என் காதை வெட்டி கீழ வைக்கிறேன்...தயவுசெய்து யதார்த்த்த்தை எடைபோட க்ற்றுகொ கொள்ளுங்கள்....

எனக்கு ஒரு சந்தேகம்... நீங்கள் கொண்டாடும் விபிசிங் உயிரோடு இருக்கும் போதே அவரை மண்டலுக்காக கவிழ்த்த பாஜக உடன் திமுக கூட்டணி போட்டு 5 ஆண்டு அமைச்சரவையிலும் இருந்த்து... அன்று நீங்கள் விமர்சனம் இன்றி திமுக வை ஆதரித்தீர்கள்... இப்போது விபி சிங் செத்த உடன் அவரைப் போற்றுகின்றீர்கள்.. எப்படி பாலுக்கும் காவலாக பூனைக்கும் தோழனாக உங்களால் இருக்க முடிகின்றது..


இப்போது கூட ஈழத்திற்காக அதிமுக வை ஆதரிக்கின்றீர்கள்... காங் ஐ தோற்கடிக்க வேண்டும் எனச் சொல்லுகின்றீர்கள்... கோவையில் உங்களது மாணவர்கள் பலர் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக வேலை பார்க்கின்றார்கள்... மார்க்சிஸ்டுகள் ஒன்றுபட்ட இலங்கையில் ஈழம் ஒரு மாநில சுயாட்சி யோடு இருக்கலாம் எனக் கூறும் தனி ஈழத்திற்கு எதிரானவர்கள்....ஜெயா தனது தேர்தல் அறிக்கையில் ராமர் பாலத்தை பாதுகாக்க சேதுசமுத்திர திட்டம் கைவிடப்படும் என்கிறாள்... எப்படி பெரியார் பரம்பரை அவளை ஆதரிக்கின்றது.. இங்குதான் உங்களது பெரியாரய கண்ணோட்டம் என்ற தத்துவத்தை தனது பார்ப்பன பாசிச கண்ணோட்டத்திற்கு இணங்க ஒரு பாப்பாத்தி உங்களுக்கு பெயரளவில் தலைவியாக இல்லாத போதும் தீர்மானித்து விட்டாள்... ஓ... பாப்பான் பின்னால்தானே போகப்பிடாது... பாப்பாத்தி பின்னால பேஷா போலாமே... மாமி உங்காத்துக்கு ராமர் பாலத்தாண்ட தீத்த ஜலம் வச்சிண்டுருப்பா... குடிச்சுட்டு சேம்மா இருங்கோண்ணா..
நமது பதில்:-----
எங்க ஊரில் ஒரு சொல் வழக்கு உள்ளது அதாவது விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு விடுஞ்சு கேட்டா சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்!!என்பது போல் உள்ளது ம.க.இ.க.தோழர் பதில்.
ஜெயலலிதா அ.இ.தி.மு.க.வின் தலைவி இல்லையா?அ.இ.தி.மு.க. என்பது திராவிட இயக்கம் இல்லையா?அப்படியானால் தங்கள்து பார்வையில் திராவிட இயக்கத்திற்கும் திராவிடர் இயக்கத்திற்கும் வேறுபாடு இல்லையா?அப்படியானால் சி.பி.எம்.,சி.பி.அய். மற்றும் த்ங்களது இயக்கம் எல்லாம் ஒன்றா?
என்னய்யா விளக்கம்?திராவிடர் இயக்கத்திலிருந்து வெளியேறிய தோழர்.அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயர் போல் இருந்தாலும் திராவிட முன்னேறக் கழகம் என்று திராவிடர் என்ற ப்தத்தில் “ர்”அய் நீக்கி வைத்ததன் விளைவுதான் பார்ப்பனப் பெண்மணி தலைமைவரை போனது என்று சொல்லி இருந்தேன்.பார்ப்பனசமரசத்திற்காகத்தான் தோழர்.அண்ணா திட்டமிட்டே “ர்’ அய் நீக்கினார்.அதன் விளைவுதான் அனைத்து பகுத்த்றிவு முரண் நிகழ்ச்சிகளும்.விசயம் இப்படி இருக்க என்னவோ ஜெயலலிதா அவர்கள் எங்கள் இயக்கத் தலைவர் போலவும் தி.மு.க. உடன்பிறப்புகள் பகுத்தறிவு பிரச்சாரிகள் என்று சொன்னது போல தாங்களாகவே எழுதிவிட்டு தங்களுக்குத் தாங்களே கைதட்டி மகிழ்ந்து கொள்வது படு ஜோக் அய்யா!
ஈழத்திற்கு ஆதரவு ,ஈழவிடுதலைக்கு ஆதரவுசக்க்திகள் என்றோ காங்கிரஸ் - தி.மு.க.க் கூட்டணிக்கு ஆதரவு என்று பெ.தி.க. முடிவுக்கு வரவில்லை.நன்றாகத் தெரியும் இது தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடும் என்பது.ஹிட்லர் உலகின் ஆபத்தாக வருவான் என்பது தோழர்.லெனினுக்குத் தெரியாதா? அப்படி இருந்தும் ஹிட்லரோடு ஒப்பந்தம் போட்டதன் காரணம் அபோது காப்பாற்றப் படவேண்டியது சோசலிசமே!எனவே எதைக் கொடுத்தாவது சமாதானம் பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஹிட்லரோடு ஒப்பந்தம் போடப்பட்டது.உலகின் மனித உரிமைக்குச் சவாலாக வளர்ந்து கொண்டிருந்த ஹிட்லரிடம் கை குலுக்கி சோசலிசத்தைக் காப்பாற்றிய தோழர்.லெனினுக்கு அபோது ஒப்ப்ந்தம் போட்டாலும் ஹிட்லரின் பாசிசம் பின்னர் உலகத்திற்கு ஆபத்தாகும் என்பது தெரியாதா?தெரியும் தெரிந்திரிந்தும் கை குலுக்கியதன் காரணம் அப்போதய தேவை சமாதனம் ,சமாதானம்,சமாதானம்.
உலகில் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்கள் அனைத்தும் ஈழத்தமிழர்க்ள் மீது பயன்படுத்தப்படுகிறதுஅதற்கு எதிராக சுண்டுவிரலைக்கூட அசைக்காதவர்களுக்குப் பாடம் புகட்டத்தான் த.பெ.தி.க.வின் இந்த நிலைப்பாடு அதுவும் கைகுலுக்கி அல்ல.
அவர்கள் அம்மாமி என்பதும் தெரியும் தங்களது புரட்ச்சிகர தேர்தல் புறக்கணிப்பும் தெரியும்.

April 26, 2009 11:39 PM
rasa said...
பாப்பான் சாதி ஒழிப்புக்கு போராட வரலாம்.. ஆனால் முடிவு செய்யும் இடத்துல அவன் இருக்க்க் கூடாது. யாதவர் இருக்கலாமா... இசை வேளாளர் இருக்கலாமா.. மேன்ன் இருக்கலாமா..

இது ஒருவகையான சொத்தைவாதம்... அல்லது நபர்களை வைத்து செயலைத் தீர்மானிக்கும் ஒரு அறிவியலற்ற அணுகுமுறை இது... பிற்பட்ட சேவை சாதிகளில் பிறந்த மேற்குறிப்பிட்ட தமிழினத் தலைவர்கள் பலரும், பல்வேறு தருணங்களில் பாப்பானுக்கு பல்லக்கு தூக்கி உள்ளார்கள்... அவர்கள் தூக்கி கீழே வைத்த பல்லக்கிருந்துதான் பாஜக தமிழகத்தில் காலூன்றியது...

த்த்துவம் நடைமுறையை தீர்மானிப்பது தலைமை தன்னிச்சையாக என உங்களது அமைப்பு போலவே எண்ணிக் கொண்டு இருக்காதீர்கள்... கம்யூனிச இயக்கங்களில் அது சாத்தியமுமில்லை...
நமது பதில்:------
யார் வேண்டுமானாலும் இருக்கலாம் பார்ப்பானைத்தவிர .மற்ற பார்ப்பனரல்லாத மக்களில் பலர் பார்ப்பனருக்குப் பல்லக்குத் தூக்கிகள் என்பதே அவர்களுக்குப் பல்லக்குத்தூக்கினால்த் தான் தன் பதவி பணம் ,அந்தஸ்த்து இவற்றைக் காப்பாற்ற முடியும் என்பதுதானே இம்மண்ணின் சுரண்டல் முறை.எனவே அப்படிப் பல்லக்கில் உள்ள பார்ப்பானை அப்படியே அலுங்காமல் தூக்கி தலைமீது தூக்கிவைத்துக்கொள்வதுதான் தங்களது புரட்சியோ!.
கமியூனிச இயக்கங்களில்தானே பூணூலை மறைத்து வர்க்கம் பேசி இந்தச் சமூக அமைப்பு நிலபிரபுத்துவம் , முதலாளித்துவம் எனக்கூறி தலைமைக்குச் செல்லமுடியும் விடாமல் நெருக்கிக்கேட்டால் இல்லை இல்லை இங்கு பார்ப்பன சாதிய ஒடுக்குமுறையும் உண்டு ஆனால் பார்ப்பான்என்று பிரித்துப் பார்க்கத்தேவை இல்லை இடஒதுக்கீடு வேண்டாம் அதுவெல்லாம் சலுகைங்காணும் என்று சமூக விடுதலையை ஒழிக்க முடியும்.சூப்பர் கமியூனிச இயக்கங்கள் அப்பா.

April 26, 2009 11:48 PM
rasa said...
நிலப்பிரபுத்துவம் என்ற வரையறை செய்த்தால் அது சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என கட்டாயம் ஏதுமில்லை... அப்படி பார்த்தால் முதலாளித்துவம் வளர்ந்த நாடுகளில் சமூக மாற்றம் ஏற்பட்டு கம்யூனிசமா வந்துவிட்டதா என்ன•...எப்படி இப்படி எல்லாம் லாஜிக்கே இல்லாம யோசிக்கிறீங்க•.

அசோகர் ஆட்சி பின்னால் திரும்பிப் போக ஆசைப்பட்ட பவுத்த்த்தின் ஆட்சி... அதற்கு பெயர் தேக்கம்... முன்னேற்றமோ புரட்சியோ அல்ல•..

களப்பிர்ர் காலம் பற்றி இவ்வளவு தகவல் உள்ளதா... ஆதாரம் தர முடியுமா...

கல் உடைக்கும் செட்டியாரை.... நாற்றுநடும் சைவ வேளாளனைக் கண்டிருக்கின்றீர்களா....

மலம் அள்ளும் ஆதிக்க சாதியை பார்த்து இருக்கின்றீர்களா...
நமது பதில்:----
லாஜிக் இல்லாமல் யோசிப்பது நாங்கள் இல்லை தோழரே! முன்னால் சோவியத்தில் அரை நிலபிரபுத்துவம்,அரை முதலாளித்துவம் என்கிற நிலையிலிருந்து நேரடியாக சோசலிசம் அரங்கேறியது.சீனாவில் நிலபிரபுத்துவத்திலிருந்து புரட்ச்சிகரமாக சோசலிசம் வந்தது.இதுவெல்லாம் எமக்கும் தெரியும். இதுவெல்லாம் தங்களது கமியூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் சமூகம் பற்றிய பார்வையின் கோளாறே.என்ன நாங்களா உப்ரி உற்பத்தியின் சமூகப் பங்கு என்றெல்லாம் ஃபார்முலா எழுதிஅதனடிப்படையில் சமூகம் தன்னை மாற்றிக்கொள்வது எப்படி என எழுதி உங்களை இம்சை செய்கிறோம்? இல்லையே!தங்களது அடிப்படையில் எந்த மாற்றமும் நடை பெறவில்லை என்பதுதான் உண்மை..அதற்காக மார்க்கியம் சமூக அறிவியல் அல்ல என்று கூறவில்லை.அந்தக் கொள்கை சொன்னதை மீறி சமூக மாறுதல்கள் நடந்துள்ளது சமூக அறிவியல் பார்வை கொண்டவர்கள் ஒத்துக் கொண்டாக வேண்டும்.நிலபிரபுத்துவம் என்றால் சீனாவில் ,முன்னால் சோவியத்தில் நில உடமையாளர்கள்தான் ஆதிக்கவாதிகள்.அச்சமூக அமைப்பு அத்ற்கு ஏற்றவாறு இருந்தது.
அதே சமயம் இங்கு அப்படி இல்லை என்பதைக் கூறத்தான் தங்களது அடிப்படையிலேயே கூறினேன்.அதாவது இங்கு ஆதிக்கச் சக்தி பார்ப்பானே.அப்படி இருக்க அந்தப்பூணூலை மறைக்க சிவப்புச்சட்டை போட்டு நிலபிரபுத்துவம் என்பது ஏமாற்று வேலை இல்லாமல் வேறு என்ன?
இது நிலபிரபுத்துவமாம் ஆனால் இங்கு பார்ப்பன சாதிய ஒடுக்குமுறையாம் .இதில் உள்ள சூது என்னவெனில் பார்ப்பனர் என்பதில்லாமல் பார்ப்பன சாதியஒடுக்குமுறை என்பதன் மூலம் பார்ப்பனரை ஆதிக்கசக்தியிலிருந்துக் காப்பாற்ற எல்லா சாதியிலும்தானே ஆதிக்கச் சக்தியினர் உள்ளனர் எனக்கூறுவதற்கு வசதியாகத்தான் இவ்வார்த்தை.
என்னையா,நிலபிரபுத்துவம் என்றால் இங்கு பார்ப்பானை மீறிய இந்து மதத்தை எதிற்கும் அல்லது லட்ச்சியம் செய்யாத நிலபிரபு அல்லவா இருக்க வேண்டும்? அது இல்லையாம் இங்கு வேறாம் ஆனாலும் அதை அப்படித்தான் அழைப்பார்களாம்.அதாவது ஹீலியம் வாயு கனம் இல்லாமல் இருக்கும் ,எளிதில் தீப் பற்றிக்கொள்ளும் என்பதுதான் அதன் வடிவம் இதுதான் என்றால் இவர்களது வாயு கனமாய் இருக்கும்,பெட்ரோலே ஊற்றினாலும் எரியாது ஆனாலும் அது ஹீலியம்தான் ஏனெனில் அது அத்ன் உண்மை குணாம்சம் இல்லாமல் இருந்தாலும் எங்கள் அறிவியல்ப் படி அது ஹீலியம்தான் என்பது போலத்தான் உள்ளது.
உபரி உற்பத்தி தன் வரலாற்றுப் பணியைச் செய்யவில்லை என்பதால்தான் வரலாற்றுத்தேக்கம்.மற்றபடி அசோகர் காலத்திற்குப்பின் திரும்பிப்போக என்பதெல்லாம் வரலாற்றுத் தேக்கம் அல்ல.இல்லை அப்படித்தான் என்றால் அது எப்படி என்பதை விளக்குக.வளர்ந்து வந்த சமூகம் அப்படியே நின்று போனதுதான் தேக்கம் அப்படி இல்லாமல் திரும்பிப் போனது என்றால் அந்த இயக்கம் [சமூக ] எப்படிப்பட்டது?அப்படியே இருஎதாலும் அதுவும் த்ங்களது வரையரைக்குள் வராதே?
கள்ப்பிரர் காலம் என்பது இருண்ட காலம் ,குப்தர் காலம் பொற்காலம் என பார்ப்பனர்கள் புகழுவது எதனால் அய்யா? வேள்விக்குடிச் செப்பேடு நமக்குச் சொல்லுவது என்ன அய்யா?பார்ப்பனரை சம மனிதனாக்கியதுதான் கள்ளப்பிரர் காலம்.
அடுத்து , கல் உடைக்கும் செட்டியாரை.... நாற்றுநடும் சைவ வேளாளனைக் கண்டிருக்கின்றீர்களா....
என்றக் கேள்வி.
அட அதுதானய்யா நாங்கள் சொல்லுவது .இங்கு சாதிவாரியாகத்தான் தொழில் செய்ய முடியும் அதைத்தான் தோழர் பெரியார் ,”மக்களைச் சாதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு சாத்க்கும் இன்னின்ன தொழில் என்று கற்பித்து அந்தத் தொழிலை அந்தந்தச் சாதி தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டியதுதான் மனித தர்மம் என்கிறதான நிர்பந்தம் இங்கு இருந்த்து வருகிறது”.
குடியரசு:-07.06.31
எனவே ஒருசாதியின் தொழிலை வேறு சாதியினர் செய்யமுடியாது.அதே சமயம் எல்லா சாதியினரும் உடல் உழைப்பில் உள்ளனர்.பிள்ளைமாறாக இருந்தாலும் அதி விவசாயக்கூலியாக இருக்கிறான். ஆனால் சமூகவளர்ச்சிக்காண எந்த உடல் உழைப்புமே இல்லாமல் சமூகத்தில் ஆதிக்கவாதியாக உள்ளான் பார்ப்பான் என்பதைக்காட்டத்தான் இவ்வுதாரணம்.
அதை திசைதிருப்பிப் பார்ப்பானைக் காப்பாற்ற தாங்கள் படும் பாடு ……தோழரே பூணூல் பச்சையாக வெளியே தெரிகிறது கொஞ்சம் தாங்கள் அனிந்திருக்கும் சிவப்புப் சட்டையை வைத்து மூடுங்களேன் .. !!1
இங்கு உபரி உற்பத்தி அபகரிப்பில் சாதியின் பங்கு என்ன?
சாதி என்பது யாருக்காணது?
பார்ப்பான் இச்சமூகத்தில் என்ன நிலை?
தேசிய இனப்பிரச்சனையில் தங்களது நிலை என்ன?
இவையல்லாம் விவாதிக்கலாம் ..நன்றி தோழரே!
எனது பிளாக் பெயர் arivunnanayam.blogspot.com .ஆனால் தங்களது பிளாக் கிடைக்கவில்லையே!
இவண் ,
மௌ.அர.சவகர்

No comments: