Wednesday, April 22, 2009

ம.க.இ.க. தோழர்களுக்கு மட்டுமல்ல

தற்போது ம.க.இ.க.வும் பெரியார் திராவிடர் கழகமும் இணையத்திலும் இதழ்களிலும் மோதத்தொடங்கியுள்ளன.ஆரம்பம் தோழர் மதிமாறனிடம் தொடங்குகிறது. பின் அது படிப்படியாக பெரியார் திராவிடர் கழகம்என்பதிலிருந்து பெரியாரிடம் வந்து சேர்ந்து உள்ளது.வரவேற்கிறோம்.ஏனெனில் இதுதான் ம.க.இ.க.விற்கும் பெரியார்திராவிடர் கழகத்திற்கும்(பெரியார்) உள்ள உண்மையான முரண்பாட்டை வெளிக்கொணரும்.அந்த வகையில் தோழர்.இரயாகரன் அவர்களுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.ஏனெனில் அவர்தான் 5 கேள்விகளை முன் வைத்து அதற்கு தங்களதுநிலைப்பாட்டையும் வைத்துள்ளார்.
1) பிறப்பில் பார்ப்பானாகப் பிறந்தவன்பார்ப்பனியத்தை எதிர்த்து போராட முடியாதா?
2) பெரியாரின் பார்ப்பனிய(சாதி) ஒழிப்பு எப்படி எந்த வழியில் சாத்தியமாகும்?
3) பெரியாரியஅமைப்புகள் சாதியை (பார்ப்பனிய) ஒழிப்பை எப்படிநடைமுறையில் வைக்கின்றன?
4) ம.க.இ.க.பார்ப்பனியத்தை எந்த வகையில் ஆதரிக்கின்றது?
5) வி.பி.சிங்கின் அரசியல் என்ன?
இதற்கு அவர்களது நிலைப்பாடு:
1) பிறப்பால் உயர்சாதியில் பிறப்பவன் சாதி அடையாளத்தை இழந்து அதற்கு எதிராகப்போராட முடியும்.இதை மறுப்பது சாதிய சித்தாந்ததை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனிய்ம்தான்.
2) பெரியார் சாதிய சமூக அமைப்பின்மேல் அதை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் மேல் விமர்சனம் செய்தவர்.இதன் மூலம் சமூகத்தை விழிப்புறச் செய்தவர்.இதற்குமேல் சாதியை ஒழிக்க அவரால் வழிகாட்ட முடியவில்லை.
3) பெரியார் இயக்கத்திடம் சாதியை ஒழிக்கத் திட்டம் கிடையாது.விழிப்புணர்வு பிரச்சாரம் தாண்டி சாதியை ஒழிக்கும அரசியல் திட்டம் கிடையாது.
4) ம.க.இ.க. சாதியை ஒழிக்கும் அரசியல் வழியைக்கொண்டுள்ளது.அது பார்ப்பனியம் என்றால்,அதை எப்படி ஏன் என்று விளக்குங்கள்.இட ஒதுக்கீடுத்திட்டம் ஒரு கொள்கை ரீதியாக வைத்துள்ளனர்.அது தவறு என்றால் ஏன் எப்படி என்று விளக்குங்கள்.
5) வி.பி.சிங் இந்தியாவின் பார்ப்பனிய சமூக அமைப்பின் ஒரு ஆளும் வர்க்க பிரதிநிதி.அரசியல் இருபுக்காக சமூகக் கொந்தளிப்பை தவிர்க்கச்செய்யும் சீர்திருத்தங்கள் சமூகத்தை மாற்றுவது இல்லை


நன்றி தோழரே!
தங்களது எல்லாக்கேள்விகளும் தங்களது நிலைப்பாடும் நமது அடிப்படை முரண்பாடின்மீதே நிற்கிறது.பார்ப்பனர் என்பது த்ங்களைப் பொறுத்தவரை ஒரு உயர் சாதி மட்டுமே.அதாவது நிலபிரபுத்துவத்தின் இந்திய வடிவம் அதுவும் பார்ப்பனர் அல்ல பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை அவ்வளவே. பார்ப்பனர் என்பது நாயக்கர்,கவுண்டர்,வன்னியர்,பிள்ளைமார் போன்ற ஒரு உயர் சாதியினரே இதுதான் தங்களது நிலைப்பாடு.
தங்களது நிலைப்பாட்டின்படி இங்கு ஆளும் வர்க்கம் “அமெரிக்கத் த்லைமையிலான மேல் நிலை வல்லரசுகள்,தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம்,நிலபிரபுத்துவம்”
இதைப்பார்க்கும்முன் முதலாவது கேள்விக்கான பதிலை பார்ப்போம்.
காலகாலமாக அடிமைப்படுத்திவரும் பார்ப்பன சுரண்டல் அமைப்பில் பார்ப்பனர்மீதான நம்பிக்கை துளியும் இல்லை.மாறாக அவர்கள் எமது போராட்டக்களத்துக்கோ அல்லது எமது கொள்கை வழி நடைமுறைக்கு ஊறு விளைவிக்காத ஆதரவோ கொடுத்தால் அதை உபயோகிப்பதில் எந்தத் தடையும்மில்லை.மாறாக இதையே உபயோகித்து மீண்டும் தலைமையைக் கைப்பற்றினால் என்னவாகும் என்ற வறலாற்று ரீதியான அனுபவந்தான் பார்ப்பனரை அமைப்பில் உறுப்பினராக்க மறுக்கிறது.திராவிட இயக்கத்தில் தோழர்.அண்ணாத்துரை செய்த திராவிடர் என்கிற பதத்தில் ‘ர்’அய் நீக்கியும் பார்ப்பனர் எதிர்ப்பு என்கிற பதத்தை ‘பார்ப்பனியம்’ என்றும் மாற்றியதன் விளைவுதான் அந்தத் திராவிட இயக்கத்திற்கு ஒரு பார்ப்பன பெண்மணி தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டது.மேலும் பார்ப்பனியத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் போராடவேண்டும் என்பதுதான் எமது ஆசையே.அப்படிப்போராடுகிறவர்களும் போராட்டக்களத்திற்கே வரட்டும். மாறாக இயக்கத்தை முடிவு செய்ய ததுவதை வடிவமைக்க பார்ப்பனர்கள் தேவையே இல்லை.இதுதான் எமது நிலைப்பாடு.
சரி அடுத்ததாக த்ங்களது ஆதிக்கச்சக்தி பற்றிய நிலைப்பாட்டிற்கு வருவோம்.
ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவம் இதனூடாக நிலபிரபுத்துவம். நிலபிரபுத்துவம் இங்கு என்னவாக உள்ளது? பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை.அப்படியானால் நிலபிரபுத்துவமும் பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறையும் ஒன்றா? இதில்தான் சிக்கல் தொடங்குகிறது.இது நிலபிரபுத்துவம்தானா அல்லது இந்தப்பெயரால் பார்ப்பனச் சுரண்டல் மறைக்கப்படுகிறதா?பார்ப்போமா!
மார்க்கிய அடிப்படையான நிலபிரபுத்துவம்தான் இது சற்று மாறுதலுக்கு உட்ப்பட்டதுஎன்பது போலத்தான் இந்த விளக்கம் உள்ளது.சுமார் 2000 ஆண்டுகளாக ஒரே சமூக அமைப்பாக இருந்த இந்த சமூக அமைப்பு அதாவது எந்த சமூக மாற்றதிற்கும் உள்ளாகாத (அசோகர்,களப்பிரர் ஆட்சிகளில் மட்டும் சற்று அசைந்து கொடுத்தது)சமூகமாக இருந்து வந்தது(வரலாற்றுத் தேக்கம்) தங்களது. கூற்றுபடி நிலபிரபுத்துவம் எனில் என்ன நடந்திருக்கவேண்டும் அடுத்த சமூக மாற்றத்திற்குச் சென்றிருக்க வேண்டுமல்லவா? மாறாக என்ன நடந்தது? எந்தமாற்றமுமே நடக்கவில்லை.ஏன்?
வெள்ளையர் வருகைக்கு முன் 54 தேசங்களாக இருந்த(சமஸ்தானங்களாக) நம் நாடு நிர்வாக வசதிகளில் வேறுபட்டு இருந்தாலும் சமூக அமைப்பால் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.மிகப் பெரும்பான்மையான உற்பத்திமுறை விவசாயம்தான்.மன்னர்களும்,செல்வத்தர்களும் இருந்தனர்.முக்கியமாக சாதி முறை வருணாச்சர்ம அடிப்படையில் நடைமுறையில் இருந்தது.என்ன நடந்திருக்க வேண்டும்? நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகள் உபரி உற்பத்தி அபகரிப்பின் காரணமாக முரண்பட்டு(பகை) மோதி அடுத்தச் சமூக அமைப்புக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லவா?
அது நடந்ததா? இல்லையே.இன்னும் சொல்லப்போனாலஆதிக்க வர்க்கம் தன் மூளைஉழைப்பையும்(யுக்தி) முதலீட்டையும் செலுத்தி உபரி உற்பத்தி அபகரிப்பை அதிகரிக்கச் செய்யும் முயற்சியே வர்க்க மோதலின் அடிப்படை.அதிகார வர்க்க நலனுக்கான யுக்தியும்,வர்க்க மோதலும அடுத்தபடி நிலைக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டுமே!அது நடந்ததா? இல்லையே! மாபரும் வரலாற்றுத் தேக்கம் தானே நிகழ்ந்தது.
ஏன் என்பதை பின்னர் பார்ப்போம்.முதலில் இச்ச்மூக அமைப்பை நிலபிரபுத்துவம் என அழைப்பது தேவை இல்லாத ஒன்று என்பது தெளிவு. அப்படியானால் இது என்ன சமூக அமைப்பு?அதாவது என்ன சுரண்டல் முறை?
இம்மண்ணில் உள்ள சுரண்டல் முறை “பார்ப்பனிய உற்பத்திமுறை”.அது என்ன பார்ப்பனிய உற்பத்திமுறை?
நிலபிரபுத்துவ உற்பத்தி முறையில் நிலபிரபு !---
முதலாளித்துவ உற்பத்தி முறையில் முதலாளி!---
இவர்கள்தான் பிரதானமாய் உபரி உற்பத்தியை அபகரிப்பர்.உற்பத்திமுறையும் அதற்கேற்றாற் போல் அமைந்திருக்கும்
ஆனால் ந்ம் நாட்டில்???
இன்றும் கூட
கண்டதுண்டா கண்டதுண்டா கல் உடைக்கும் பார்ப்பானைக் கண்டதுண்டா????
கண்டதுண்டா கண்டதுண்டா நாற்று நடும் பார்ப்பனத்தியைக் கண்டதுண்டா????
கண்டதுண்டா கண்டதுண்டா மலம் அள்ளும் பார்ப்பனைக் கண்டதுண்டா????
இல்லையே .இது எதைக்காட்டுகிறது?உடல் உழைப்பில் இச்சமூகம் இல்லாமலேயே சுரண்டலை அமல்ப்படுதி வந்துள்ளது.வருகிறது.ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக சமூகம் தேங்கிக்கிடந்ததாகச் சொன்னோமே காரணத்தைப் பார்ப்போமா!
எந்த ஒரு சமூகத்திலும் ஆதிக்கச்சக்தி தன் சுய லாபத்திற்காக [உபரி உற்பத்தி அபகரிப்பின் அளவை அதிகப்படுத்த] உற்பத்திக்கான யுக்தி,முதலீடு இவற்றில் உயர் நிலை மாற்றம் செய்வர்.
ஆனால் நம் நாட்டில்,விவசாயம்,நெசவு வேலை,மண்பாண்டம் செய்தல் போன்று ஒவ்வொரு தொழிலும் யார் யார் ஈடுபடுவது என்பதை அவர்கள் சாதியே நிர்ணியத்தது.
உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாது பார்ப்பனர்கள் மேலே சொன்ன பொருள் உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பதில் முதலிடம் பெற்றார்கள்.அதாவது உற்பத்தி விசைகளான மனிதர்களை சாதியே நிர்ணயித்தது.
இங்குதான் நிலபிரபுத்துவம் என்பது பொருத்தமற்ற வார்த்தை என்பது புல்னாகும்.மார்க்கிய கண்ணோட்டத்தில் சாதி கருத்தியல் கூறு[மேல் கட்டு மானம்]ஆனால் நம்நாட்டில் உற்பத்தி விசைகளான மனிதர்களை சாதி நிர்ணயித்தபோதே சாதி பொருளியல் கூறு என்றாகி விட்டது[கீழ் கட்டுமானம்]. இதைத் தோழர் பெரியார் மிகச்சரியாக,”மக்களைச் சாதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு சாத்க்கும் இன்னின்ன தொழில் என்று கற்பித்து அந்தத் தொழிலை அந்தந்தச் சாதி தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டியதுதான் மனித தர்மம் என்கிறதான நிர்பந்தம் இங்கு இருந்த்து வருகிறது”.
குடியரசு:-07.06.31
மேலும் உற்பத்திமுறையில் சாதியின் ப்ங்கு பொருளாதாரச் சுரண்டலுக்கு எவ்வாறு அடிப்படையாக இருந்தது என்பதைத் தோழர் பெரியார்,”வர்ணாசிர்ம தர்மப்படி இன்னின்ன வகுப்புகளுக்கு இன்னின்ன தொழில்[உற்பத்தி விசைகள்]இன்னின்ன உரிமைகள்[உற்பத்தி உறவுகள்]என்பதான திட்டமே நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கு இல்லாமல் தடைப் படுத்திக் கொண்டிருக்கிறது.”
குடியரசு :-13.09.31
மற்ற சமூக முறையில் ஆதிக்கச்சக்திகள் உற்பத்துயோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும்.ஆனால் பார்ப்பனிய உற்பத்திமுறையில் அவ்வாறு இல்லை என்பதே மற்ற ஆதிக்கச்சக்திகளுக்கும் பார்ப்பன ஆதிக்கச்சக்திக்கும் உள்ள வேறுபாடு.
பார்ப்பனர்கள் உபரிஉற்பத்தி அபகரிப்பின் ஆதிக்க வகுப்பாய் இருந்து சுரண்டுவதை தோழர்.பெரியார்
”மனிதனாகப் பிற்ந்தவன் எல்லாம் அதாவது எவனாவது தன்னை இந்து என்று சொல்லிக்கொண்டால் அவனை உடனெ பார்ப்பன வரிச்சனியன் பிடிதுக்கொண்டது என்பது போல கால வரையரை ஒன்றுமே இல்லாமல் கர்ப்பந்தரித்தது முதல் சகும் வரை செத்தும் விடாமல் அதாவது கர்ப்ப்மானவரி,சீமந்தவரி,பிள்ளைப் பேறு வரி,தீட்டுக்கழித்தல் வரி,வித்தியாபியாச வரி,கல்யாண வரி,சாந்திமுகூர்த்த வரி சாவு வரி,சாக 10 நாழிகை வரி ,செத்தபின்னால் வரி,செத்தவர் மக்களிடமிருந்து வருசா வ்ருசம் வரி - ஆகிய பல துறைகளில் காலாவதி இல்லாமலும் ஒரு நபரைக்கூட விடாமல் 100க்கு100 பேரிடமும் பணக்காரண் ஏழை என்ற பாகுபாடே இல்லாமல் கொடுப்போர் முட்டாள்தனத்திற்கும் களிமண் மூளைக்கும் தகுந்தாற்போல் வரி கறந்து விடுகிறார்கள்”.
குடியரசு :-09.01.27
இது உபரி உற்பத்தியின் மூன்றில் ஒரு ப்ங்கு.
உபரி உற்பத்தியின் இரண்டாம் பகுதி யாகம்,சடங்கு கோயில் உள்ளீட்ட மூடநம்பிக்கைகளில் விரயமானது அல்லது முடக்கப்பட்டது.
மூன்றாம் பகுதி வரலாற்றுத் தேக்கத்திற்கு ஆதரவு அளித்து வந்த அரசு அமைப்பு எந்திரத்தைத் தாங்கச்சென்றது.
இந்த வரலாற்றுத் தேக்கத்தை சில அரசுகள் சீர்குலைவை ஏற்படுத்தினாலும்[அசோகர் மற்றும் களப்பிரர் ஆட்சி] சமுதாயத்திற்கு பொருளாதாரமும் அரசியலும் கட்டுப்பட்டு இருந்ததால் அந்த அரசுகள் மாற்றி அமைக்கப்பட்டன.
இதையே தோழர்.மார்க்ஸ் ,”எல்லா மக்கள் போராட்டங்களும்,அந்நிய படையெடுப்புகளும்,வெற்றிகளும்,கடும் பஞ்சங்களும் இந்திய சமூக அமைப்பின் மேல்தட்டுப் பரப்பினை மட்டுமே தொட்டன.மேற்சொன்னவை இந்துஸ்தானின் அடுத்தடுத்த செயல்கள் போலவே கடும் சிக்கலாகவும் திடீர் எனவும்,அழிப்பதாகவும் தோன்றினாலும் இதுதான் நிலைமையாக இருந்துவந்துள்ளது”.
[British Rul in India – Karl Markx]
காலனி ஆதிக்கத்தின் போது ,பிரிட்டனின் வருகையால் ,அபோது இருந்த உபரி உற்ப்த்தி அபகரிப்பின் தன்மையோடு காலணியச்சுரண்டல் குறுக்கிட நம் சமூகத்திலும் அரசியல்,பண்பாடு மற்றும் பொருளாதார அரங்குகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுத்தியது.இதனால் அத்திரம் அடைந்த பார்ப்பனர்கள் இயற்கையாகவே அந்நிய சக்திகளின் மேல் இருந்த கோபத்தை பயன்படுத்தியது.1857 சிப்பாய் கலகம்.
“லார்டு டல்ஹெளசியின் சீர்திருத்தங்கள்,ஒரு சிலரான பார்ப்பனருக்கு ஏகபோக உரிமையாக இருந்த கல்வியை நாடெங்கும் எல்லோரும் படித்து ப்யன் பெறும் வண்ணம் பரப்பிய முறையும்,இரயில்,நீராவி எஞ்சின்,தந்தி சாதனம் போன்று முறைகளைப் புகுத்தியமை போன்ற சீர்திருத்த்ங்களையும் கண்டு வைதீக மேல்சாதிக்காரர்கள் என்பவர்கள் வெகுண்டார்கள்.இத்தகைய அறிவு வளர்ச்சி,தங்களுடைய ஆதிக்கத்திற்கு எங்கு உலை வைத்துவிடுமோ என்றஞ்சி எதைச் செய்தால் இவைகளை ஒழித்துக்கட்டலாம் என நினைத்து அதைக் கண்டுபிடித்து பாமரம்க்களான,சிப்பாய்களாக இருந்த வைதீக மனப்பான்மையாளர்களை,’உங்கள்சாதியும்,மதமும் ஒழிந்துவிட வெள்ளையன் ஏற்பாடு செய்கிறான்’என்றுகூறி வெள்ளைக்காரர்களை எதிர்க்கச்செய்தனர்.இந்தச் சீர்திருத்த்ங்களும் விஞ்ஞானக்கல்வியும் பரவினால் எங்கே சாதி முறையும் அதையொட்டி அமைந்துள்ள கீழ் சாதி மக்களின் பணிவும்,அடிமைத்தனமும் மாறிவிடுமோ என்ற சுயநல எண்ணதின் பேரில்தான் மற்றவர்களைத் தூண்டினர்.’துப்பாக்கிகளில்க் கொழுப்பை தடவிக்கொடுத்தனர்,என்ற குற்றச்சாட்டிலும் கூட இந்துச் சிப்பாய்களிடம் அது பசு மாட்டுக்கொழுப்பு என்றும் முஸ்லீம்களிடம் அது பன்றிக் கொழுப்பு என்றும் பிர்ச்சாரம் செய்தது.அவரவர்களுக்கு உள்ள மத உணர்ச்சிகளையும் அதனடிப்படையாகப் பிறந்த மூட நம்பிக்கையையும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது.மேற்கண்ட உண்மைகளைவைத்துப் பார்த்தால்,1857 கிளர்ச்சி வெள்ளையனுடைய ஆதிக்க வாழ்வை எதிர்த்து ஏற்பட்டதன்று என்பதும் அவனுடைய சீர்திருத்தங்களினால் விளைந்த பலன்களை எதிர்த்தே ஏற்பட்டது என்பதும் புலனாகும்”.
தோழர் பெரியார், விடுதலை :-15.08.1957
இதன் பின் செய்த ஒப்பந்தம் என்ன? மத விவகாரக்களில் வெள்ளையன் தலையிடக்கூடாது என்பதுதானே!
அரசியல் மற்றும் பொருளாதாரம் இரண்டும் சமூகம் பெற்ற பிள்ளைகள்ட் என்ற அடிப்படையில் சமூகம் தன் கையில் உள்ளது என்பதால் அரசியலையும் பொருளாதாரத்தையும் மாற்றி அமைக்கும் சக்தி தனக்குண்டு எனப் பார்ப்பனக் கூட்டம் நிரூபித்தது.
இதன் முடிவாக உருவான வரலாறு பார்ப்பனர்களுக்கும் காலனியத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஊடல் கூடல் தொடர்பாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிப் போக்கின்போது இந்த புதிய விளைவின் எதிர் பலன்களை அனுபவிக்க ஒரு வித்தியாசமான தொழில் வியாரப் பிரிவினர் த்ன்றினர்.அவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பனியத்திற்கும் காலனியத்திற்கும்நண்பர்க்ளாய் விளங்கினர்.இந்தப் புதியவிளைவின் நேரானபலன்கள்[Positivi] சமுதாயத் தேக்கத்திற்குஅபாயகரமாக அமைந்தது.இத காரல் மார்க்ஸ்,
”இங்கிலாந்தின் குற்றங்கள் எவையாக இருந்தாலும் இந்திய சமூக அமைப்பில் ஒரு அடித்தளப் புரட்சியைக் கொண்டு வருவதில் வரலாற்றின் சுய நினைவற்ற கருவியாக இங்கிலாந்தும் செயல்பட்டது.”
[The Biritish Rule in India]
சமூகத்தேக்கத்திற்கு அபாயமக உருவெடுத்த இந்த புதியபலன்களின் நடைமுறை வளர்ச்சி தமது ஆதிக்கத்திற்கு ஆபத்தாகிவிடும் என பயந்தனர்.அவர்கள் எதிர் பார்த்தது போலவெ உருவானதுதான் நீதிக்க்ட்சி.எனவேதான் ஊடகங்கள் அனைத்தும் நீதிக்கட்சியை வெள்ளையன் அடிவருடி எனப் பிரச்சாரம் செய்தது,செய்தும் வருகிறது.
மேலும் காலனிய பாதிப்பால் இங்கு முளைவிட இருந்த தேசிய இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எறியபார்ப்பனர்கள் இந்த்திய தேசியத்தை உருவாக்கினார்கள்.இந்தத்தேசியத்திற்கு புதிதாக உருவான வியாபாரப்பிரிவினர் ஆதரவும் தந்தனர்.உண்மையான தேசிய இயக்கங்கள் முதலில் பார்ப்பனியத்திற்கு எதிராக முளைவிட்டாலும் இறுதியில் காலனியத்திற்கு ஆபத்தாக முடியும் என்பதால் காலனியவாதிகள் ‘இந்திய தேசியத்தையே’ விரும்பினர்.எனவே பார்ப்பனிய காலனிய நலன்களுக்குப் பாலமமைக்கும் முயற்சியாக இந்திய தேசியக் காங்கிரஸ் உருவானது.
இருந்தாலும் தவிர்க்க இயலாமல் ஏற்பட்ட உபரி உற்பத்தி அபகரிப்புப் போட்டியால் வரலாற்றுத் தேக்கம் அரிக்கப்பட்டதன் காரணமாக சாதி எதிர்ப்பு பார்ப்பனர் எதிர்ப்பு மற்றும் உண்மையான தேச மற்றும் சோசலிச இயக்கங்கள் உருவெடுத்தன. சமுதாயத் தேக்கத்தின் பொருளியல் அடித்தளம் அரிக்கப்படுவதைத்தடுக்க’இந்திய தேசியவாதிகள்’மேற்கொண்ட சூழ்ச்சியே இந்திய தேசிய விடுதலயாக சித்தரிக்கப்பட்டது.
இந்தப் பார்ப்பன ச்ரண்டலை மறைத்து நிலபிரபுத்துவம் எனகூறுவது யாரைக் காப்பாற்ற?
இல்லை இல்லை நாங்கள் பார்ப்பனிய சாதியஒடுக்குமுறையைத்தான் கூறுகிறோம் என்றால் இந்தப்பதத்தை உபயோகிக்க வேண்டியதுதானே?அப்புறம் என்ன நிலபிரபுத்துவம் என்ற வார்தை?????
சரி தற்போது………..
தற்போதும் சமூகத்திற்குக் கட்டுப்பட்டே அரசியலும் பொருளாதாரமும் உள்ளது.
1947க்குப் பின் அதிகாரம் முழுமையாக பார்ப்பனர்களுக்குப் போய் சேர்ந்தது.அந்த வியபாரப்பிரிவினர் இந்திய தேசிய்ம் காக்கும் முதலாளிகள் ஆயினர்.அதாவது இந்தியதேசிய முதலாளிகள் ஆயினர்.அதுவரை பிரிட்டன்மட்டுமே இந்நாட்டைக் கொள்ளை அடித்துவந்த அந்நியதேசம் என்பதுமாறி பன்னாட்டுச் சக்திகளும் களம் இறங்கின.[இந்திய விடுதலையில் அமெரிக்காவின் ஆர்வம்,நேருவின் அமெரிக்க நட்பு] எனவே இங்குபார்ப்பன-இந்திய தேசிய-பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளை என வடிவம் பெற்றுள்ளது.
இதிலும் பிரதானமாக பார்ப்பனரே உள்ளனர்.இந்தப் பார்ப்பனகட்டமைப்பின் மேல் அமர்ந்துள்ள மற்ற ச்ரண்டல் அமைப்புகளும் தாங்களது பாதுகாப்பு என்பது பார்ப்பனக் கட்டமைப்பின் வலிமையைப் பொறுத்ததே என உணர்ந்துள்ளதால்தான் ஆரம்பத்தில் காக்கிரஸுக்கு கொடுத்து வந்த ஆதரவில் பெரும்பான்மையை பி.ஜே.பி. போன்ற நேரடி பார்ப்பன அமைப்புக்குத் தருகின்றனர்.இந்த அரசு அமைப்பில் பார்ப்பன ஏகபோகம் இருப்பதுதான் நல்லது என்பதால் இடஒதுக்கீடு என்றவுடன் தகுதி திறமை எனக்கூச்சலிடுகின்றனர்.இந்தப்பார்வையோடுதான் இட ஒதுக்கீடு,வி.பி.சிங் மற்றும் மண்டலைப் பார்க்க வேண்டும்.அரசு அதி காரங்களில் ஏற்படும் பன்மைத் தன்மை என்பது ஆதிக்கதிற்கு ஆப்பு வைக்கும் என்பதாலேயே மண்டலைக் குழி தோண்டிப் புதைக்கத்துடித்தனர்.மண்டலுக்கு எதிராக நடந்த யத்திரை மீண்டும் சிப்பாய்கலகத்தை நினைவுபடுத்துகிறது.பார்ப்பனருக்குப் பாதகமான சூழல் வெள்ளையரால் ஏற்படுவதைத் தடுக்க எப்பட் சிப்பாய்க் கலகமோ அதைப்போலத்தான் அத்வானியின் ரத யாத்திரை.மதம் கையில் எடுக்கப்பட்டவுடன் தமிழகம்,உ.பி.,பீகார் தவிர்த்து இந்தியா முழுதும் ராமன் உயர்த்திப் பிடிக்கப்பட்டான்.மண்டல் மண்ணைக்கவ்வியது.ஆனாலும் அதன் விளைவுகள்பார்ப்பன ஏகபோகத்தை அகில இந்திய அளவில் வெளிக்கொணர்ந்தது.
தற்போதுதனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்ற நிலைபாடு அரசியல் தளங்களில் பிரதிபலிக்கக்காரணம் மண்டலேஇந்த மண்டல் அறிக்கையை வி.பி.சிங்.வந்துதானே அமல்ப்படுத்தினார்.அதுவும் அரையும் குறையுமாக- காரணம் என்ன.பார்ப்பன நெருக்கடி.பார்ப்பனிய சமூக அமைப்பின் ஆளும் வர்க்கப் பிரதிநிதி ஒருக்காலும் அர்சு அதிகார மய்யத்தின் ஆளும் சக்தியை ஒரு போதும் பார்ப்பனர்களிடமிருந்து பிரிக்க அதற்கு முயற்சி செய்யவே மாட்டார்கள்.அப்படியிருக்க வி.பி.சிங் ஏன் அதைச் செய்ய வேண்டும்?
மேலும் பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் சம்மம் இல்லை. மாறாக ஒருவர் மீது ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.மேலே இருப்பவன் பார்ப்பான்.அடுத்தடுத்துள்ள மக்கள் படிப்படியாக உரிமை இழந்துள்ளனர்.சம்மில்லாம்லும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டும் அதேசமயம் தனக்குக்கீழ் உள்ள சாதியினரின் ஒடுக்கலுக்கு துணையாகவும் இருந்து வருகின்றனர்.அவர்கலது விடுதலையில்தான் தம் விடுதலை என்பதை உணராமலும் உள்ளனர்.இது பிற்படுத்தப்ப்ட்டவருக்கு ம்ட்டும்ல்ல தலித்துகளுக்கும் பொருந்தும்.எனவேதான் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெறுகிறது.இந்திய தேசிய அரசியலில் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் எப்போது வந்தது?மண்டலுக்குப்பின்னர்தானே? 30 வருடங்களுக்கு முந்தைய அரசியலும் தற்போதைய அரசியலும் எவ்வளவு மாறுட்டுள்ளது.மாயாவதி என்கிற தலித் பெண்மணி அதுவும் உ.பி.ல் முதல்வர் ஆவது எப்படி சாத்தியம் ஆயிற்று?அவர் பார்ப்பனரோடு சமரசம் வைத்தலும் ஒரு தலித்தை தத்லைமை எற்க பார்ப்பனச்சமூகம் அக்கீகரித்து இருக்குமா?சமூகக் கொந்தளிப்பை தவிர்க்க வி.பி.சிங். இதைச்செய்தார் என்றால் அப்போது இருந்த சமூகக் கொந்தளிப்பு என்ன கொந்தளிப்பு?அவர் அரசியல் இருப்புக்காக இதைச் செய்தார் என்றால் - உண்மையைச் சொல்லப்போனால் அதற்குப்பின்னர்தானே அரசியலிலேயே அவர் காணாமல்ப் போனார்.
மேலும் எனக்கு தரக்கூடாது என்று தடுக்கப்படுகிற விசயம் என்பது என்னுடைய உரிமையா அல்லது சலுகையா? கல்வி என்பதும் சமூக சமம் என்கின்ற உரிமையும் என்னுடைய உரிமைதானே?நான் சலுகை கேட்டால் அது சீர்திருத்தம் ஆனால் நான் கேட்பதோ உரிமை அது சமூக தலைகீழ் மற்றம்.நான் ப்றைதான் அடிக்க வேண்டும் என்பதை மாற்றி கலெக்டராக அமர்வது பார்ப்பனச்சமூக அமைப்பில் தலை கீழ் இல்லையா?நான் பனைதான் ஏற வேண்டும் என்பதை மாற்றி தாசில்தாராக அமர்வது சமூக மாற்றமில்லையா?நான் சூத்திரனாய் கஞ்சிக்கலையத்தோடு வயல்காட்டு வெள்ளாளனாய் திரிந்த நான் ஆலய அதிகாரியாக இருப்பது இந்தப் பார்ப்பனச் சமூக அடையாளதை அடித்துப்புரட்டிப் போடுவது இல்லையா?நான் செருப்பு தைப்பதை மாற்றி ஆர்.டி.ஒ.வாக இருப்பது சமூக மாற்றமில்லையா?
இந்தச் சமூகம் தங்களது வர்க்கப் புரட்சிவரை மாறாமல் அப்படியே இருக்க வேண்டுமா?அப்படி மாறாமல் இருந்தால்தான் சரி இல்லையென்றால் நான் இந்தத் தரகு முதலாளித்துவ அமைப்பின் அங்கம் அல்லதுஎடுப்டி அப்படிதானே தோழரே?
இதற்கு இடஒதுக்கீடு தேவை இல்லையா?அதுவும் பிற்படுத்தப்பட்டவருக்குத் தேவையே இல்லையா?
தங்களது இடஒதுக்கீட்டுக்கொள்கையை ஒருத் திட்டமாக வைத்துள்ளீர்கள்.அது தங்களது வெளீயீடான ‘சாதி தீண்டாமை ஒழிப்பு:நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’என்ற புத்தகத்தின் அடிப்படையில்தானே உள்ளது? அதை நிரூபிக்கும் வகையில் தங்களது புதிய ஜனநயகத்தில் பெ.தி.க.மீதான விமர்சனம் வந்துள்ளது.அதாவது “அரசு ஒடுக்குமுறை எந்திரத்தில் இட ஒதுக்கீடு கேட்டு நாம் போராடுவதில்லை.அதே சமயம் ,பார்ப்பன மேட்டுகுடி கும்பல் இடஒதுக்கீட்டினை எதிர்ப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.”
பு.ஜ.ஏப்ரல் 2009
அதாவது இடஒதுக்கீடு இருந்து தொலையட்டும்.அது ஒரு பெரிய விசயம் அல்ல.ஆனால் அதை எதிர்க்கும் குரல் வந்தால் கடுமையாக எதிப்போம்.ஏனெனில் அது ஒரு சலுகையே.இதுதானே தங்களது நிலைப்பாடு.மேலும் அக்கட்டுரையில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பார்ப்பன - மேட்டுக்குடியினரின் சாதிச் சண்டை என எழுதி தங்களது நிலைப்பாடு அப்புத்தகதிலிருந்து மாறுபடவில்லை எனக்காட்டியுள்ளீர்க்ள்.சரி அதனடிப்படையி ஏற்கனவே கேட்க்கப்பட்ட கேள்விகளை த்ற்போது மீண்டும் வைக்கிறேன்.ஏனெனில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களினொற்றுமையை வளர்ப்பதற்கான வழி முறையை பின்பற்றாமல் அவர்களின் மோதலைத் தூண்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் ம.க.இ.க.விடம் சில கேள்விகளை முன் வைக்க வேண்டியுள்ளது.
1) தீண்டாமை இழிவுதொழில் அடிப்படையில் வந்ததல்ல- அம்பேத்கார்.ஆனால் ம.க.இ.க.வின் நிலைப்பாடு ‘தீண்டாமை இழிவுத்தொழில் அடிப்படையில் ஆனது’என்பதாகும்.
2) தாழ்த்தப்பட்டோர்மீதான அடக்குமுறை கொடுமைகளுக்கு ‘ஆதிக்க வெறியையும்,அதிகாரத் திமிரையும் இவர்களுக்கு வழ்ங்கியது தீண்டத்தக்க சாதி இந்துக்கள்தான்’என்கிறதும.க.இ.க. அப்படியானால் இங்கு சமூக ஆதிக்கவாதி யார்?
3)’அனைத்து ஆதிக்க சங்கஙக்ளையும் தடை செய்துவிட்டு தீண்டாமைக் குற்றம் புரியும் சாதிகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்து விட்டால் தீண்டாமை மறைந்துவிடுமா?சாதி ஒழிந்து விடுமா?
4)தீண்டாமைக் குற்றம் புரியும் நபர்களை மட்டிம் தண்டிக்காமல் அவர் சார்ந்த சாதியின் இடஒதுக்கீட்டை ரத்து செய்தால்தீண்டாமைக் குற்றம் அதிகரிக்குமா?குறையுமா?
5)பார்ப்பனர் ஒடுக்குமுறையும் சூத்திரர் ஒடுக்குமுறையும் ஒரே பார்வையில் பார்ப்பதுதான் நாணயமா?
6)ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் தீண்டாமையை ஒழிக்க வழி கூறாமல் 50 ஆண்டுகளாக உள்ள இட ஒதுக்கீட்டை ஒழிப்பதன் மோலம் தீர்வு ஏற்படுமா?இடஒதுக்கீடோ சாதிச் சங்கங்களோ இல்லாத 50 ஆண்டுகளுக்கு முன்பு சாதி ஒடுக்கு முறையே இல்லை என்று ம.க.இ.க. கூறுகிறதா?அடுத்த வேளை கஞ்சிக்கு இல்லாதவன் கையில் அரிவாளுடன் சாதி வெறி பிடித்து நிற்க வைப்பது எது?
7)‘தீண்டாமைக் குற்றம் புரியும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய் ‘என்பதுதீண்டாமைக்குக் காரணம் சாதி,சாதிக்கு ஆதாரம் இந்து மதம்.எனவே தீண்டாமையை ஒழிக்க வேண்டுமாயின் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என முழங்காமல் ‘இட ஒதுக்கீட்டை ரத்து செய் ‘என்பது பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.,சங்கராச்சாரிகளின் உள்நோக்கத்தோடு ஒத்துப் போகிறதே?இது சரியா?
8) ‘இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த்ங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமை ஒழிப்புக்கு தீர்வாகாது’என்று கூறும் ம.க.இ.க. தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா?எதிற்கிறதா?
9)சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் பிற்ப்டுத்தப்பட்ட்வரிடம் மட்டுமே உள்ளதா? தாழ்த்தப்பட்டவர்களுக்குள் உள்ள -ஒடுக்குமுறையில் தங்கள் மீது பிற்படுத்தப்பட்டோர் செலுத்துவதற்கு கொஞ்சமும் குறைவில்லாதஒடுக்குமுறை தீண்டாமைக்குள்- தீண்டாமையை எக்கண் கொண்டு பார்க்கிறது?இல்லை அப்படி இல்லை என்கிறதா?
10)’இழி தொழில் செய்வதால் தலித்துகள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் - ம.க.இ.க. அப்படியானால் பாபு ஜெகஜீவன்ராம் அமைச்சராக இருந்தபோதே பார்ப்பனரால் இழிவுபடுத்தப்பட்டது எதனால்?
[ தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையைஎவ்வளவுதூரம் வலியுறுத்துகிறோமோ அதைவிட அதிக அளவு தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக எங்களது போராட்டம் உள்ளது.அதில் எமது தோழர்கள் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளானதும் சமீபத்திய நிகழ்வு.]
அடுத்ததாக சாதி ஒழிப்பில் பெரியார்.
சாதியின் இருப்பு எதில் உள்ளது அய்யா?ஒன்று சாதியை தானே ஏற்றுக் கொள்வது மற்றொன்று அகமண முறை.முதலாவதாக சாதியை நானாக மறுப்பது.அது எப்படி சாத்தியம்?அது சம அனுபவம் மற்றும் சம நுகர்ச்சியில்தான் நானும் சமமான மனிதன் என்ற உணர்ச்சிவரும்.பெரியார் காலத்திலிருந்து ஆரம்பத்தில் பெரியார் தொண்டர்களால் ஆலய நுழைவு நடத்தப்பட்டது.ஆனால் பிற்காலத்தில் தன்னெழுச்சியாக ஆலய நுழைவு தலித் இளைஞர்களால் நடத்தப்படுகிறதே அது எப்படி?இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி கற்கப் போகும் தலித் மாணவர்கள் சம்மம் என்பதை உணர்ந்து ஆலய நுழைவு என்பது எனது உரிமை என்ற முழக்கத்துடன் செல்கிறான்.அது மட்டுமல்ல அவனது சாதி அடையாளங்கள் இழிவானவை என்றால் அதையும் அகற்றுகிறான்.இந்த நிகழ்வுகள் சாதிஒழிப்பின் கூறா இல்லையா?இது எதனால் விளைந்தது?படித்து வேலைக்குச்சென்ற தலித்துகள் தங்களது சாதி சார்ந்த இழி தொழிலை மறுப்பது மற்றும் கிராம்ங்களை விட்டு வெளியேறியவர்கள் த்ங்களது சொந்த ஊருக்கு வரும்போது தன் சமூக இளைஞரிடம் சமூக சிந்தனையை ஊட்டுவது[இமானுவேல் அவர்கள் இராணுவ்த்தி பணி புரிந்தபோது ஊருக்குவரும் போதெல்லாம் இளைஞர்களிடம் சுய மரியாதையை ஊட்டிவந்தார் என்பது வரலாறு ]இது போன்ற உதாரணங்கள் நிறைய முன் வைக்கலாம். எனவே இட ஒதுக்கீடு என்பது தானாக ஏற்றுவந்த சாதியத்தை மறுப்பது என்பதன் சமூகத்திட்டம்.
அடுத்ததாக மணமுறை.புற மணமுறை என்பது பெரியார் காலத்திலிருந்தே கட்சியின் நடைமுறை.இன்னும் சொல்லப்போனால் கட்சி மாநாடுகளில் பெண் கொடுத்து பெண் எடுத்துள்ளனர்.இது எதைக் காட்டுகிறது? புற மண முறை என்பது பெரியாரால் பெரியாரியக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதைத்தான்.விதவைத் திருமணம்,சமூக ஒடுக்கு முறைக்கு உள்ளான சமூகத்தில் பெண் எடுக்க வேண்டும் என்ற உறுதியும் நடைமுறையும் இருந்து வந்ததுஉதாரணம் [குத்தூசி குருசாமி]
நிலை இப்படி இருக்க பெரியார் இயக்கத்திடம் சாதியை ஒழிக்க எந்த ஒரு திட்டமும் இல்லை என்பது எவ்வளவு பெரிய அடிப்படையில்லாக் கொச்சைப்படுத்தும் குற்றச்சாட்டு.சரி தங்களது இயக்கத்தில் சாதி பற்றிய விளக்கம் என்ன?சாதி ஒழிப்புக்காண திட்டம் நடைமுறை என்ன?எதையுமே சொல்லாமல் பெரியார் மீது கூசாமல் கொச்சைப்படுத்துவது எதன் அடிப்படையில்?
இறுதியாக,ஆதிக்கச்சக்தியில் பார்ப்பனர் உண்டா இல்லையா என்பதில் குழப்பமான - பார்ப்பன சாதிய ஒடுக்குமுறை -என்பதுஅதையும் ஒழுங்காகச் சொல்லாமல் நிலபிரபுத்துவம் என க்கூறுவதனடிப்படை பார்ப்பனர் என்ற விசயத்திற்கு நிலபிரபுத்துவ சட்டை போட்டுக் காப்பாற்றுவது,சமுக அடிப்படையில் இட ஒதுக்கிடா என்றால் இல்லை தலித்துகளுக்கு வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம் பிற்படுத்தப்பட்டவருக்குக் கிடையாது என்பது.அப்படியானால் மண்டல் அறிக்கை உடன்பாடு இல்லைதானே என்றால் இல்லை இல்லை அதைப் பார்ப்பனர்கள் எதிர்த்ததால் நாங்களும் எதிர்த்தோம் என்பது போன்றவை தங்களது பார்ப்பன முகத்தைத் தெளிவாகத் தெரிகிறது என்பதே எமது கருத்து.
இறுதியாக இவ்விவாதத்தில் காலம் கடந்து கலந்து கொள்வதால் இதைத் தொடக்கமாக எடுத்துக் கொண்டு இனி விவாதத்தைத் தொடருங்கள் தோழரே!

இவண்
மௌ.அர.சவகர்.

1 comment:

பெரியார்தளம் said...

நன்றி தொடரட்டும் உமது பணி....