Wednesday, September 16, 2009

பெரியார் பணி முடிப்போம் இல்லை இல்லை காப்போம்

பெரியாரின் பிறந்தநாளான்று பெரியார் அதைச் செய்தார் இதைச் செய்தார் எனவே எல்லோரும் ஈரோட்டுக் கண்ணாடிமாட்டுங்கள் என வழக்கம் போல்சொல்ல வரவில்லை
”எனக்குத் தகுதி உள்ளதோ இல்லையோ யாரும் முன் வராததால் நானே என் தோளில் போட்டுக்கொள்கிறேன்”எனக் கூறி சமூகப்பணிசெய்யப் புறப்பட்டார்.
அன்று ஒரு பெரியார் இன்று எத்தனையோ பெரியார் தொண்டர்கள்.அமைப்பாகவும் தனி மனிதரகவும் எண்ணிக்கையில் அதிகம்.நாம் பெரியாரியலை எவ்வளவுதூரம் நகர்த்த பயன்பட்டுள்ளோம்என்பதை சுய ஆய்வு செய்வதுதான் நாம் எடுத்து வைக்கும் அடி சரியானதா இல்லையா? அதாவது பெரியாரியலைச் சொல்லிக்கொண்டு வேறு மயக்கத்தில் உள்ளோமா இல்லையா என்பது தெளிவாகும்.
இதை எழுதுவதன் நோக்கம் அவர் சரி இவர் சரியில்லை என்றெல்லாம் பேச அல்ல.மாறாக இச்சமூகம் சந்தித்து வரும் ஒவ்வொரு இடியாப்பச் சிக்கலையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை சுய விமர்சனமாகப்பார்க்கவே இதை த் தொடங்குகிறேன்.
தற்போது நடந்தேறியுள்ள யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத நம் இன அழிப்பு இட்லருகும் முசோலினிக்கும் பாடம் நடத்தும் தகுதியை ராஜபக்சேவுக்குக் கொடுத்துவிட்டது.இந்த இன அழிப்பு நிகழ்ந்தபோது எத்தனைத் துடிப்புகளைக் காட்டியும் தடுக்க இயலாமல் தவித்த உண்மையானதலைவர்கள் ,நேர்மையாளர்கள் அதன் பின் இனி அடுத்து நம் கடமை என்ன என்பதை முடிவு செய்து தன்னாலான வேலையைச் செய்யத்தொடங்கிவிட்டனர்.(ஈழம்- நாம் இனி செய்ய வேண்டியது என்ன?-தோழர் கொளத்தூர்.மணி)
அதேசமயம் தற்போது தமிழின அழிப்பிற்கு காரணம் தமிழினத்ட் துரோகமே என மெல்லப் பரப்பப்ட்டு வருகிறது, உண்மைதானா?
நடந்து முடிந்த் நிகழ்வுகளில் படித்த செய்திகளிலும் பெரும்பாலும் நம் கண் முன் நிறுத்தப் படுவது துரோகமே.(நக்கீரன் - ஜெகத் கஸ்பர் கட்டுரையில் பெரும்பாலும் அதுவெ முனிறுத்தப்படுகிறது)நிகழ்வுகளும் உண்மையாய் இருக்கலாம்,அப்படியானால்?…. இதை முன்னிறுத்தும் சக்த்திகள் கூறுவதுபடி தமிழந்துரோகத்தால் அழிந்த்து போனானே ஒழிய அழிக்கப்படவில்லை என்பது உண்மையா?
மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.ஆனால் இந்த உனர்ச்சி வயப்பட்ட முடிவு மாபெறும் ஆபத்தை உள்ளடக்கியுள்ளது.என்ன ஆபத்து? வேறொன்றுமில்லை பார்ப்பான் - தமிழனாக்கப்படும் ஆபத்து.பார்ப்பான் திருந்தி நேர்மையாகத் தன்னை மாற்ரி தமிழனாவது அதாவது இச்ச்மூகத்தொடுகலப்பது என்பது வேறு(நல்ல கற்பனை).மாறாக தமிழகச் சிக்கல்களைப் பார்ப்பானோடு அய்க்கியமாக்கிப் பார்ப்பானைத் தமிழனாக்குகிற முயற்சி ஆபத்தானதே.
ஆம்,தமிழின அழிப்பு நிகழ்ந்தபோது அதன் பின்னனியை மக்களுக்குக் கொண்டு செல்லாமலும்,அப்படிக் கொண்டு சென்றவர்களும் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது.பெரியார் திராவிடர் கழகமெடுத்த தேர்தல் நிலைப்பாட்டிற்கும், மற்ற சக்திகள் நிலைப்பாடு எடுத்ததற்கும் அடிப்படை வேறுபாடு நிறைய உண்டு.இன அழிப்பை நிகழ்த்துவது இந்திய மய்ய அரசின் அதிகார மய்யமும் காங்கிரசின் தலைமையும் என்ற அடிப்படையில் கவனமாக எடுத்து வைக்கபட்ட நிலைப்பாடு.வேறு வழியே இல்லை காப்பாற்ற வேண்டிய கரங்கள் தொடர்ந்து தடை போடுகிறது.பெ.தி.க.கடுமையாக ஒடுக்கப்படுகிறது.ஏராளமான தோழ்ர்கள் சிறையில்.தலைவர் தே.பா.சட்டத்தில் கைதாகி விடுதலை செய்யப்படுகிறார் அடுத்தப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் கைதாகி உள்ளே செல்கிறார்.இன்னொரு பொதுச்செயலாளர் சோனியாவின் வ்ருகைக்காக உள்ளே தள்ளப்படுகிறார்.கைது செய்யப்பட்டதற்கோ தோழர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காகவோ எள்ளளவும் எதிர் நிலை எடுக்கப்படவில்லை,தன் ஆட்சியைக் காக்கவேண்டி ப்ன்னனியை திருப்திப்படுத்தவேண்டி இப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்ததற்குகூட கவலை இல்லை.மாறாக,போராட்டம் நடத்தி மய்ய அரசு இன அழிப்பு நிகழ்த்துவதற்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்கிற அவசர செயல்கள்தடுக்கப்பட்டபோதுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் மற்ற சக்திகள் இதே சிக்கலில் தங்களது குரலை கவனமாகப் ப்திவு செய்தன.ஏழ் வுடுதலைக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கையை ஒரு அரசியல் கட்சியின் அபிலாசைஎனும் கோணத்தில் கொண்டு சென்றன.உண்மையில் அது வெறும் ஓட்டுக்காண தந்திரமாகத்தான்பட்டது.ஆதரவு சக்திகளாகப் புறப்பட்ட சக்த்திகளின் ஆதரவில் இருந்த ஆபத்து:
1) அவர்கள் தீர்வாக ஈழ்த்தை ஒருபோதும் சொல்லவில்லை.
2) ஈழவிடுதலை என்பது இந்திய மேலாண்மைக்கு விடப்படும் சவால் என்பதே மய்யாதிகாரமய்யத்தின்(பார்ப்பன) எப்போதும் மாறாத நிலை.எனவே எக்காரணம் கொண்டும் ஈழ் விடுதலையை இந்தியப் பார்ப்பன அரசு அனுமதிக்கவே அனுமதிக்காது.எனவே பார்ப்பன அதிகார மய்யம் எதிர்க்கப்படாமல் அதன் நடவடிக்கையின் பின்னனி வெட்ட வெளிச்சம் ஆக்காமல் அதேசமயம் இதற்குப் பாற்ப்பனப் பின்னனியை ஆதரவுக்கு அழைத்தது( பார்ப்பனச்சங்கம் இலங்கைத்தமிழ்ர் ஆதரவு என்ற நிலைப்பாடு)போன்றவை.
3) பார்ப்பன பாரதியைப் புகழ்ந்துகொண்டே திராவிடர்,திராவிட பத எதிர்ப்பை முன்னிறுத்தும் சீமானின் ஈழவிடுதலை ஆதரவு.
4) மறைந்த இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்தில் அதை எதிர்த்த எல்லோரும் கடுமயாக சிறைக்குள்சித்திரவதை அடைந்தனர்.ஆனால் அதே அளவு எதிர்ப்பை முன் வைத்த ‘சோ’ என்கிறைரட்டை நாக்குப் பார்ப்பான் எந்தவொரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் அதே சமயம் நெருக்கடியை எதிர்த்த வீரனாக வலம் வந்தான்.
அதே போல பெ.தி.க.த் தொண்டர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட வேளையில்(சீமானும் அப்போது பெ.தி.க. மேடைகளில் பேசித்தன் உள்ளே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது) தே.பாதுகாப்புச் சட்டமும் வழக்குமாக அலைந்து கொண்டு இருந்த நேரத்தில் நெருக்கடியையே சந்திக்காத மற்ற சக்திகள் பார்ப்பன இந்து சனாதானிகளின் ஆதரவைத்திரட்டின.அவர்களும் தந்தனர்.இந்திய தேசியத்தில்தான் சிக்கல் என்பதை உரத்துச் சொல்ல வழி இல்லாமல் அகண்ட பாரதம் காக்கும் இந்துத்வாவாதிகளிடம் கை கோர்த்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய நிகழ்வு.
இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால் ஈழச்சிக்கல் பார்ப்பனஆதரவோடு ,அவர்களோடு கலந்து எதிர் கொள்ளும்போதே பார்ப்பனச் சிக்கலைஅதாவது இங்குள்ள மற்றும் ஈழச்சிக்கலில் யார் எதிரியோ அதை அதாவதுப் பார்ப்பன- அதிகார மய்யத்தை ந்ம் கண்ணுக்கு மறைத்து தமிழர் சிக்கல்களை பார்ப்பன அமைப்புகளிடம் ச்மரசமாகத் தாரை வார்ப்பத்ற்கான முன்னோட்டம்தான் இது.
மலேசியாவில் தமிழர் சிக்கல் எப்படி இந்திய,இந்துச் சிக்கலாயிற்று என்பதற்கான வரலாறு நமக்குத் தெரியவில்லை என்றாலும் அதற்கான வழி என்ன என்பதை எந்நிகழ்வுகள் நமக்குக் காட்டுகிண்றன.
அதனால்தான் பார்ப்பனச் சிக்கல்தான் ஈழவிடுதலையின் தடைக்கல் என்பதையே சொல்லாமல் தமிழினத் துரோகம்தான் எனக் கூறுவதன் பின்னனி இதுதான்.
இந்தியவின் இருக்கமான மௌனம்தான் ஈழ் இன அழிப்பின் பின்னனி என்பதுதானெ உண்மை.மய்ய அதிகாரத்திற்கு நெருக்கடி ஏற்ப்டுத்தும் பார்ப்பன எதிர்ப்பு,இட ஒதுக்கீடு போன்றவறை எப்போதுமே ஒழுங்காகக் கூறாமல் எங்களுக்கும் அந்தக் கொள்கை உண்டு எனக் காட்டி அதே சமயம் பார்ப்பன எதிர்ப்பை உருக்குலைக்கும் வேலையைச் செய்து கொண்டு தமிழினத்துரோகம் என்ற பதத்தால் இவற்றை மறைக்கும் நிகழ்வுகள்தான் அரங்கேறி வருகின்றன.
இது போன்ற மாய வலைகளில் நம் பெரியார் தொண்டர்கள் தங்களை இழந்து பார்ப்பன் எதிர்ப்பைக் குறைத்து வெறும் தமிழினத் துரோகிகள் எதிர்ப்பு எனும் நிலை எடுத்தால் அது பார்ப்பன ஆதிக்கச் சக்திக்கு ஆதரவாகப் போய்விடும் என்பதோடு கொதிக்கிற எண்ணைச் ச்ட்டியிலிருஎது எரிகிற அடுப்பில்வீழ்ந்த கதைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தோழர்களே! என் மனதுக்குப் ப்ட்டதை எழுதித் தொடங்கியுள்ளேன். இதை விமர்சனத்துக்கு உட்ப் ப்டுத்தி மற்றதோழர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.!!!!
இவண்,
மௌ.அர.சவகர்,
பழனி.