Thursday, June 23, 2011

நவம்பர் 26 மும்பை தாக்குதலும் ஈழப் போரும்

ஏதோ பயங்கரவாதிகளின் செயல் என்று மட்டும்தான் நினைத்து வந்தோம் மும்பை நவம்பர் 26 தாக்குதலை.ஆனால் என்.டி.டிவி.யின் ராணுவ,பாதுகாப்பு விசயங்கள் தொடர்பான ஆசிரியர் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் இலங்கை ராணுவம் வென்றது எப்படி?” என்ற நூலை வாசித்த பின் ஒரு சந்தேகம் வருகிறது.
அதற்குமுன் இந்நூலைப்பற்றி சில வரிகள்.இது சிங்களர்களின் வெற்றியை மகிழ்ந்து மகிழ்ந்து கொண்டாடும் நூல்.ராஜபக்செவின் அறிவு,திறமை இவைதான் மிகவும் அடிக்கடி போற்றி புகழப்படும் விசயங்கள்.எதையும் விருப்பத்திற்கு மாற்றி எழுதும் சுய விருப்பு வெறுப்பு அடங்கிய நூல்.அதற்கு ஒரு உதாரணம் சார்லஸ் ஆண்டனி என்ற படையணி தன் மூத்த தளபதியின்,ஈழத்திற்காக தன் உயிரை ஈந்த புலிகளின் மூத்த தளபதியின் பெயரை வைத்தார் பிரபாகரன்.மேலும் தன் மகனுக்கும் அவர் பெயரையே வைத்தார்.இதுதான் உண்மை.ஆனால் அந்நூலில் இந்த படையணிக்கு தன் மகனின் பெயரே பிரபாகரன் வைத்தார் என்பது போன்ற பல விசயங்கள் உள்ளன.
அது ஒரு தனி விமர்சனமாக வைப்போம்.இப்போதைக்கு இந்த தாக்குதல் பற்றி பார்ப்போம்.
இந்நூலின் 145 ஆம் பக்கத்தில் நவம்பர் 26,27 களின் முக்கியத்துவத்தை அதுவும் பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின் முக்கியத்துவம் அதுவும் 2008 போரின் உக்கிரச் சூழலில் அவரது உரையை உலக மக்களே ,அதுவும் உலகத்தமிழரின் எதிர்பார்ப்பு நிறைந்த நேரத்தில் மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதல் மூன்று நாட்கள் தலைப்புச் செய்தியாகி மாவீரர் உரை மூன்றாம் பக்கத்திற்குச் சென்றது மிகப்பெரிய இழப்பு.இந்நிகழ்வை நிதின் கோகலே பயங்கர மகிழ்வாகக் கொண்டாடுகிறார்.அந்த மகிழ்ச்சி ஆர்பரிப்பு ச்ற்று அதிகமாகவே அதில் தெரிகிறது.
மேலும் அந்நூலில் பாகிஸ்தானுக்கும் இல்ங்கைக்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றியும் மறைவின்றி உரையாடுகிறார்.நமக்கு ஏற்கனவே தெரிந்த உலகு அறிந்த உண்மை பாக்கிஸ்தானுக்கும் லஸ்கர்-இ-தொய்பாவிற்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டது என்று.மேலும் தற்போது மும்பைத்தாக்குதல் வழக்கு விசாரணை வெளிக்கொண்டு வரும் இவ்வுறவு நமக்கு ஒரு சந்தேகத்தை உண்டாக்குகிறது.இந்நூலை வாசித்தால் ராஜபக்சேவின் தந்திரம்,முறைகேடான நடவடிக்கை தான் வெற்றி பெற எந்த வழியையும் கடைப்பிடித்தமை எல்லாம் தெரியும்.
1.இந்தியா,பாக்கிஸ்தான்,சீனா போன்ற நாடுகளை ஒவ்வொரு விசயத்திற்கும் உபயோகித்தது.
2.வலைதளங்களில் மேலும் மற்ற ஊடகங்களில் எல்லாம் ஈழத்துக்கு ஆதரவானச் செய்திகளை வரவிடாமல் சிங்களத்தரப்புச் செய்திகளை மட்டுமே வெளிவரச்செய்தது.
3.அம்சா என்ற அரசுத் தூதுவன் செய்த முறை கெட்ட வேலைகள்.அவன் அளிக்கும் செய்திகளைப் போட வைக்க அத்ற்கு விலையக எதையும் தந்தது.[இது அந்நூலில் கவனமாக தவிற்கப்பட்டுள்ளது]
4.உலக மனித மறபை மீறி அனைத்து உதவிகளையும் ஈழப்பகுதிக்கு வராமல் தடுத்தது.உலகின் பார்வையே படாதவாறு தடுத்தது.
5.பாக் அரசின் உளவுத்துறையினரை உபயோகித்தது. [சீன,இந்திய உளவுத்துறையையும்தான் என்றாலும் பாக்கின் உளவு உதவிதான் மிக முக்கியம்.ஏனெனில் அந்த உளவுத்துறைதான் பயங்கரவாதிகளின் பயிற்சியாளர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.]
எனவே என்ன நமக்கு ஏற்படும் சந்தேகம் மும்பைத் தாக்குதலுக்கு நவம்பர் 26 தேர்ந்தெடுத்தது என்பது ராஜபக்ஸே-பாகிஸ்தானிய-லஸ்கர் கூட்டு நடவடிக்கையோ என்பதே.
இந்நுலின் முழுவதும் மனித உரிமை மீறப்பட்டிறுப்பதை மறுக்கவில்லை.அதை மார்தட்டிச் சொல்கிறார் நிதின் கோகலே.ஏனனில் பயங்கரவாதியான பிரபாகரனும்,புலிகளும் அழிக்கப்பட எடுத்த நடவடிக்கைக்காக அவை எல்லாம் மிகச்சரியே என்கிறார்.
மொத்தத்தில் அரசுகள் ம்ட்டுமல்ல பயங்கரவாதிகளும் நம் இனவிடுதலையின் எதிரிகளே.

மௌ.அர.சவகர்,
பழனி.