Tuesday, April 23, 2019

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சர்வதேச ஆதிக்கப்போட்டியா?

இலங்கையில் தற்போது நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதம் என ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிடுகின்றன. இதுவரை முஸ்லீம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் இடையில் இப்படியொரு வெறுப்பை உமிழும் முரண் இருந்ததாக செய்திகள் ஊடகங்களில் கிடைக்கவில்லை. தமிழின அழிப்பு நடவடிக்கையின்போது சீன சார்பாகவே இலங்கை இருந்தது. அதர்கு எதிர் நடவடிக்கையாக தமிழருக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அமெரிக்கா யுத்த முடிவில் ஆளும் சீன ஆதரவு அரசு கவிழும் அடுத்து வரும் அரசு தமது ஆதரவு அரசாகவே அமையும் எனக் கணக்குப்போட்டு கள்ள மௌனம் காத்தது. இறுதியில் ஏறக்குறைய அது எதிர்பார்த்தது போலவே அமைந்தது. ஆனாலும் சீனாவால் தனது இருப்பை விட்டுக் கொடுக்க முடியவில்லை. இதன் விளைவாகவே ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிகழ்வு. ஆனால் அதில் தோல்வி. ஆக அங்கு அதிகாரப்போட்டியில் வெளிப்படையாகவே அமெரிக்கா VS சீனா என்பது தெரிந்தது. அதிபர் ஸ்ரீ சேனாவுக்கு நெருக்கடி கொடுக்க அரசை நிலைகுலையச் செய்ய இந்த இரண்டு சர்வதேச சக்திகளில் ஒன்று முடிவெடுத்து இருக்கலாம். சீனா பாக்கிஸ்தானின் ஆதரவான நாடு. பாக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கங்களோடு உறவுள்ள நாடு. அமெரிக்கா ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு மறைமுகமாக சிரியா யுத்தத்தில் ஆதரவு அளித்தது. எது எப்படியோ அடிப்படைவாதமெனும் ஆயுதம் ஆதிக்கவாதிகளின் கரங்களில் என்பது மறுக்க முடியாத உண்மை.