Saturday, May 18, 2019
கோட்சே பற்றிய பார்ப்பனப் பிரச்சாரத்துக்கான பதில்
1. கோட்ஷே காங்கிரஸிலும் உறுப்பினராக இருந்தவர்.
1940 களில் இரட்டை உறுப்பினர்களாக பலர் காங்கிரஸிலும் இந்து மகாசபையிலும் இருந்தார்கள். இதனைக் கண்டித்து அப்போதைய காங்கிரஸில் தீர்மானமும் அப்படி இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. கோட்சேவும் கொள்கை என்ற அடிப்படையில் இந்துத்வாவோடு இருந்துகொண்டு காங்கிரஸில் இருந்திருந்தார். மேலும் தற்போது உள்ளபடி BJP போன்று பார்ப்பனர்களுக்கான அரசியல் அமைப்பாக எதுவும் இல்லாத சூழலில் காங்கிரஸையே பயன்படுத்தினர். மேலும் காங்கிரஸிலிருந்து விலகி RSS ல் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதன் கொள்கைத் தொடர்புள்ள இந்துமகா சபையில் இயங்கியுள்ளார். எனவே காங்கிரஸில் அவர் உறுப்பினராக இருந்தார் என்பது அபத்தம்.
2. கோட்ஷே RSS உறுப்பினர் இல்லை.
அவ்வமைப்பில் உறுப்பினராக இருக்கக் கொள்கை ஈடுபாடு கொண்டிருந்தால் மட்டுமே போதுமானது. தற்போதைய ISIS அமைப்புகளுக்கு முனோடியாக யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் தேவைப்படும்போது காரியத்தில் இறங்கு எனும் முறையை செயல்படுத்தியவர் கோட்சேதான். காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கோட்சேவின் தம்பியான கோபால் கோட்சே எழுதிய தனது நூலில் தானும் அவரது அண்ணன் நாதூராமும் வீட்டில் இருந்ததை விட மிக அதிக நேரம் RSS அலுவலகத்திலேயே கழித்தோம் என்பதை குறிப்பிட்டுள்ளார். எனவே RSS, இந்து மகாசபை என்ற வேறுபாடு இருந்ததில்லை. காந்தியைக் கொலை செய்த பின் இந்தச் செயல் முழுவதும் தன்னால் மட்டுமே திட்டமிட்டு செய்யப்பட்டது என்றே சாதித்தார். எனவே மிக கவனமாக தனது செயலால் RSS க்கு சிக்கல் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளதால் தனக்கும் RSS க்கும் இருந்த தொடர்பை வெளிக்கொண்டு வரவில்லை. இதன் காரணமாக தற்போது பார்ப்பனர்கள் துணிச்சலாக அவர் RSS இல்லை என்று வாதிடுகின்றனர்.
3. அவர் இந்து மகாசபை உறுப்பினர்.
ஆம் அவர் RSS களப் பணியாளர் அதே சமயம் காந்தி கொலைக்குப் பின் இந்து மகாசபையோடு தொடர்பை நின்றுள்ளதாக காண்பித்துக் கொண்டார்.
4. கோட்ஷே இந்தியா பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்பால்தான் காந்தியைக் கொலை செய்தார்.
தவறு. இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தவர் காந்தி. இன்னும் சொல்லப்போனால் பிரிவினை நடந்தால் என் பிணத்தின் மீதுதான் நடக்க வேண்டும் எனறவர் காந்தி. நேருவும், ஜின்னாவும் பிரிவினை நடந்தால் நிலப்பகுதிதான் பிரியும், மாறாக இந்தியாவில் இருக்கும் முஸ்லீமும், இந்துவும் இந்தியர்களாகவே இருப்பர் அதே போல் பாக்கிஸ்தானில் இருக்கும் இந்துக்களும், முஸ்லீம்களும் பாக்கிஸ்தானியர்களாகவே இருந்துவிடுவர் என்றெண்ணினர். மாறாக இல்லை பிரிவினை நடந்தால் இரத்த ஆறு ஓடுவது தவிற்க இயலாது என்று சொன்னவர் காந்தியே!. அதே சமயம் பிரிவினைக்கு ஆதரவானவர்களைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் அவர் கொன்றிருக்க வேண்டியது நேருவையும், ராஜாஜியையும்தான். ஏனென்றால் இவர்கள்தான் பிரிவினை தேவை என்றவர்கள். மேலும் இங்கு ( இந்தியாவில் ) இரண்டு இணைய முடியாத தேசியங்கள் உள்ளது. இவை பிரிய வேண்டும் என்று எழுதியவர் இந்து மகாசபையின் தலைவர் சவார்க்கர் ஆவார். எனவே பிரிவினையின் காரணகர்த்தா என்று காந்தியைக் கொலை செய்யவில்லை.
5. காந்தியை ஏன் கொன்றார்?
கல்கத்தாவில் நிகழ வேண்டிய மதக் கலவரத்தை ( முஸ்லீம்களின் மீதான பழி வாங்கும் தாக்குதல் ) ஒற்றை நபராகச் சென்று கலவரத்தைத் தடுத்ததோடு நல்லிணக்கத்தை அதுவும் வட இந்தியாவே பற்றி எரிந்து கொண்டிருந்தபோதும் நல்லிணக்கமாக இருக்கச் செய்தார் காந்தி. இத்தனைக்கும் கல்கத்தாவில் முஸ்லீம்களால் இந்துக்கள் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தனர் என்பதும் செய்தி. ஒரு புறம் நேருவும், மௌண்பேட்டனும் ராணுவத்தின் துணை இருந்தும் அடக்க முடியாத கலவரத்தை ஒற்றை ராணுவமாகத் தடுத்து நல்லிணக்கமாக மாற்றினார் காந்தி. அடுத்து டெல்லியில் நடக்க வேண்டிய முஸ்லீம்களின் மீதான தாக்குதலையும் வழக்கமான தன் உண்ணா நோன்பால் தடுத்துவிட்டார். மொத்தத்தில் காந்தி இருக்கும்வரை இந்து முஸ்லீம் கலவரம் வராது என்பதே பிரதானக் காரணம்.
6. கோட்ஷே தேச பக்தர்.
இல்லை அவர் பார்ப்பன தர்மவாதி. அவர் தேச விடுதலையையே மிலேச்சன் வெளியேறிய இந்து தர்ம தேசமாகத்தான் பார்த்தார்.
7. கோட்ஷே ஒரு கொலையாளி, அவருக்கு உட்சபட்ச தண்டணையாக தூக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே அவரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.
பார்ப்பனர்கள் வெகு சுலபமாக ஒரு விசயத்தை பிரும்மாண்டமாகவும், ஒரு விசயத்தை அற்பமாகவும் தமது நலனுக்கேற்றவாறு பிசங்கம் செய்வார்கள். காந்திக்கும் கோட்சேவுக்கும் தனிப்பட்ட பகை இல்லை. மாறாக காந்தியின் மீது மிகுந்த மரியாதையையும் வைத்திருந்தார். மாறாக தனது பார்ப்பன தர்மத்தின் அடிப்படையிலேயே காந்தியைப் பார்த்தார். அதுவும் RSS ன் கொள்கை விளக்கமாக உள்ள ‘பன்ஞ் ஆஃப் தாட்ஸ்’ எனும் கோல்வாக்கரின் புத்தகத்துக்கு அடிப்படையான ‘இந்து தர்மம்’ என்ற புத்தகம் எழுதிய சவார்க்கரின் ஆலோசனை மற்றும் துணையோடு செய்த கொலை ஒரு தத்துவத்திற்கானது. ஒரு தத்துவம் கொலைகளால் பரப்பப்படுகிறது கலவரங்களால் பரப்பப்படுகிறது என்றால் அது பயங்கரவாதமில்லாமல் வேறென்ன? இது தனி நபர் பழி வாங்கல் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?
8. கோட்சேவும் - ஏழு தமிழர்களும் ஒன்றா?
கோட்சேவை வெறும் கொலையாளி அதாவது பாதிக்கப்பட்டதால் கொலை செய்தவன் என முடித்துக்கொள்கின்றனர்.
கோட்சேவையும், 28 வருடங்கள் சிறையில் இருக்கும் ஏழு தமிழரையும் ஒப்பிடுகின்றனர்.
காந்தி கொலையில் கைது செய்யப்பட்டவர்கள்
1. நாராயண் ஆப்தே,
2. நாதூராம் வினாயக் கோட்சே ( காந்தியைக் கூட்டத்தில் வைத்துக் கொன்றவன் ),
3. கோபால் கோட்சே ( நாதூராமின் தம்பி ),
4. மதன்லால்,
5. கார்காரே,
6. சாவர்க்கர்,
7. பார்ச்சூர்,
8. திகம்பர் பாட்கேயின் பணியாள்
என எட்டுப் பேர்.
திகம்பர் பாட்கே அப்ரூவர்.
இவனது சாட்சியின் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட்டது.
ஆப்தேவுக்கும், கோட்சேவுக்கும் மரணதண்டனை.( இவர்கள் மேல்முறையீடு செய்தும் மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர் )
மற்றவரில் சாவர்க்கர் technical point அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
1960 களில் மற்றவர்கள் தண்டனை முடிந்து விடுதலை ஆனார்கள்.
சரி நம் கேள்வி
இந்த ஏழு தமிழரும் கொலையை செய்தவர்களா?
அடுத்து காந்தியைக் கொல்ல கூட்டுச் சதி செய்த மற்றவர்கள் தண்டனை முடிந்து விடுதலை ஆனார்களே அதுவும் 12 வருடங்களில்!
ஆனால் 28 வருடங்களாக சிறையில் இருந்துகொண்டே இருக்கும் இவர்களை எப்படி ஒப்பிட முடிகிறது??
Tuesday, April 23, 2019
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சர்வதேச ஆதிக்கப்போட்டியா?
இலங்கையில் தற்போது நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதம் என ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிடுகின்றன.
இதுவரை முஸ்லீம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் இடையில் இப்படியொரு வெறுப்பை உமிழும் முரண் இருந்ததாக செய்திகள் ஊடகங்களில் கிடைக்கவில்லை.
தமிழின அழிப்பு நடவடிக்கையின்போது சீன சார்பாகவே இலங்கை இருந்தது.
அதர்கு எதிர் நடவடிக்கையாக தமிழருக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மாறாக அமெரிக்கா யுத்த முடிவில் ஆளும் சீன ஆதரவு அரசு கவிழும் அடுத்து வரும் அரசு தமது ஆதரவு அரசாகவே அமையும் எனக் கணக்குப்போட்டு கள்ள மௌனம் காத்தது.
இறுதியில் ஏறக்குறைய அது எதிர்பார்த்தது போலவே அமைந்தது. ஆனாலும் சீனாவால் தனது இருப்பை விட்டுக் கொடுக்க முடியவில்லை. இதன் விளைவாகவே ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிகழ்வு.
ஆனால் அதில் தோல்வி. ஆக அங்கு அதிகாரப்போட்டியில் வெளிப்படையாகவே அமெரிக்கா VS சீனா என்பது தெரிந்தது.
அதிபர் ஸ்ரீ சேனாவுக்கு நெருக்கடி கொடுக்க அரசை நிலைகுலையச் செய்ய இந்த இரண்டு சர்வதேச சக்திகளில் ஒன்று முடிவெடுத்து இருக்கலாம்.
சீனா பாக்கிஸ்தானின் ஆதரவான நாடு. பாக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கங்களோடு உறவுள்ள நாடு.
அமெரிக்கா ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு மறைமுகமாக சிரியா யுத்தத்தில் ஆதரவு அளித்தது.
எது எப்படியோ அடிப்படைவாதமெனும் ஆயுதம் ஆதிக்கவாதிகளின் கரங்களில் என்பது மறுக்க முடியாத உண்மை.
Subscribe to:
Posts (Atom)