தமிழ் தேசியமா? தலித் தேசியமா?
அன்புள்ளம்(வம்புள்ளம்) கொண்டதோழர்களே! கலகம் என்கிற கருப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளேன்.முரண்பாடுகள் பேசப்பட வேண்டும் என்பதுதான் இதன் மிகமுக்கிய குறிக்கோள்.அதை நான் மட்டும் பேசுவது சரியாக இருக்காது.எனவே இக்கருப்பில் சமூக விடுதலையை விரும்பும் தோழர்களும் பங்கெடுப்பதுதான் ஆரோக்கியமாக இருக்கும்.
அதனடிப்படையில் முதலாவதாக தலித்கலை இலக்கியக்கழகம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர்.பழனி சிவா அவர்களின் கட்டுரையை வெளியிடுகிறேன். இக்கட்டுரையில் தமிழ்தேசியர்களின் முதல் பணியே தலித் விடுதலைதான் என்று அவர்களின் பணி இலக்கை சுட்டிக்காட்டுகிறார்.தமிழ் தேசியத்தின் முதுகெலும்பாக தமிழ் தேசியர்கள் கூறுவது தமிழ் மொழியைத்தான்.ஆனால் இவரோ சமூக விடுதலையின் முதல் நிபந்தனையைக் கூறுகிறார். பெரும்பாலான தமிழ்தேசியர்களால் ஏறுக்கொள்ள முடியாத பாதையை காட்டும் தோழர்.சிவாவின் கட்டுரை இனிப்பார்ப்போம்.
தமிழ் தேசியம் எங்கே இருக்கிறது?
அன்பார்ந்த தமிழ் தேசியம் பேசும் தலைவர்களே!
தோழர்களே1 தமிழ் தேசியம் என்பது என்ன?அது எங்கே இருக்கின்றது என்ற கேள்வியையும்,பதிலையும் உங்கள்கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
தமிழ் தேசியம் பேசுபவர்கள் போராடி,போராடி சலித்துப்போய்,வெறுத்துப்போய் ஒதுங்கிப்போகிறார்கள்.அதற்கு காரணம் ஒரு மனிதனுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ அதுபோல் தமிழ் தேசியத்தின் முதுகெலும்பு முக்கியமானது.சொந்த மண்ணில் இரண்டாந்தர குடி மக்களாக ஆக்கப்பட்டு கிடக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை தமிழ் தேசியத்தின் விடுதலை.ஆண்டாண்டு காலமாக அடிமையாக்கப்பட்டு கிடக்கும் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்.இவர்கள் இந்த ம்ண்ணில் மனிதர்களாக மதிக்கப்படுவது இல்லை.அதற்கு காரணம் சாதியம்,இந்தச் சாதியம் உலகின் 190 நாடுகளில் இப்பிரச்சனை இல்லை.இந்தியாவில் மட்டும்தான் இந்தக்கொடுமை.ஏனென்றால் இந்தியாவில்தான் இந்து மதம் உள்ளது.மனிதனின் மதத்திகும் சாதிக்கும் அவர் செய்யும் தொழிலுக்கும் தொடர்பு உள்ளது.சாதி எப்படி ஒழியும்?ஒழியாது அப்ப மதமாவது மாற்றும்.நம்முடைய தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன்.சாகும்போது இந்துவாகச் சாகமாட்டேன் எண்று சொன்னார்.இங்கிலீஸ்காரர்கள் வந்து 350 ஆண்டுகள் ஆகின்றன.இங்கிலீச்காரன் வந்த பிறகு நாட்டில் பல விசயங்கள் வந்தன.ஆக 2,000 ஆண்டுகளுக்கு முன் சாதி கிடையாது மதம் கிடையாது.பார்ப்பனர்கள்சாதியத்தை மதத்தை புகுத்தி,பார்ப்பன சமூகம் சுகமாக உழைத்து வாழ , உழைக்கும் மக்களை தாழ்த்தப்பட்ட மக்களை சாதி நிர்வாகமாக சித்தரித்து ஒதுக்கிவைத்ததுதான் இந்து மதம்.தீண்டாமையை காந்தி ஆதரித்து வந்தார்.அம்பேத்கர் அவர்கள் நாட்டில் தீண்டப்படுபவர்,தீண்டப்படாதவர் இவர்கள்தான் இந்நாட்டில் உள்ளனர் என்று சொன்னார்கள்.இந்தநாட்டையே புரட்டிப்போட்ட கருத்துகளை வழங்கிய அம்பேத்காரை ஓரம் கட்டிவைத்துவிட்டு இன்று யார் எல்லாமோ தலைவர் ஆகிவிட்டனர்.
அம்பேத்கர் அவர்கள் அனைத்து சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவரை சாதி இந்துக்கள் சாதிய கோட்பாட்டின் மூலம் அவர் உழைத்த உழைப்பின் பயனை மட்டும் அடைந்துவிட்டு இறுதியில் அம்பேத்கர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்று காட்டியவர்கள் பார்ப்பனர்கள்.ஆகவே இந்து மதச்சட்டத்தை எரிப்பேன் என்றார்.அதை தமிழ் ம்ண்ணில் தந்தை பெரியார் 1956 ல் சாதியைப்பாதுகாக்கும் பிரிவை எரித்து 50,000 பேருக்குமேல் கைதாகினர்.இந்த மண்ணில் அம்பேத்கரின்,பெரியாரின் தத்துவங்கள் ஒருங்கிணைந்து இருந்த்தன.ஆனால் இன்று புதிதாக தமிழ் தேசியம் என்ற பெயர் புதிதாக வருகிறது. வரவேற்க வேண்டிய விசயம்.
தலித்தியம் என்பதும் தமிழ் தேசியம் என்பதும் ஒன்று எதனாலிதைச் சொல்கிறோம் என்றால் தமிழ் தேசியத்தி முதுகெலும்பு தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை.தலித்விடுதலை கிடைத்துவிட்டால் தமிழ் தேசியத்தின் விடுதலையும் கிடைத்து விடும்.ஒரு மனிதனுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமானதோ அது போலத்தான் தமிழ் தேசியத்தின் முதுகெலும்பு தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை.எனவே தமிழ் தேசியம் பேசும்தலைவர்கள் முதலில் செய்ய வேண்டிய பணி தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை கையில் எடுத்து விடுதலை பெற்று தருவதே.
-: தோழர்.பழனி சிவா